May 20, 2024
  • May 20, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

டேனி திரைப்பட விமர்சனம்

by by Aug 2, 2020 0

பல கொடூரமான டிவி சீரியல்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களுக்கு ஓடிடி தளம் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல பல கோடிகளைக் கொட்டி படமெடுத்து தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப் பிரசாதமாகவும் அதுவே அமைந்திருக்கிறது.

அப்படி ZEE 5-ல் வெளியான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

வழக்கமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு இயக்குநர்கள் நகர்ப்புறங்களையே தேர்ந்தெடுப்பதை மாற்றி இதில்…

Read More

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

by by May 29, 2020 0

குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராவதற்குக் கொஞ்சமாகப் படித்திருந்தால் போதும் என்று நினைக்கும் பொதுப்புத்தியினாலேயே  பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் சமுதாயம் முக்கியத்துவம் தருவதில்லை. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு சரியான நீதி கிடைப்பதில் இந்த வளர்ந்த சமுதாயம், இன்னும் தளர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
 
அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எல்லா தீர்ப்புகளுமே உண்மையின் அடிப்படையில் அமையாமல், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமைவதால் உண்மையான நீதி மறுக்கப்படுவதும், அதுவே சமுதாயத்தில் உண்மை…

Read More

அசுரகுரு திரைப்பட விமர்சனம்

by by Mar 13, 2020 0

இதுவரை ஹீரோக்கள் கொள்ளைக்காரனாகிய ‘ராபின் ஹுட்’ வகைக் கதைகள் நிறைய வந்ததுண்டு. இதுவும் அப்படி ஒரு கதைதான். ஆனால், இதில் ராபின் ஹுட் போல ஹீரோ விக்ரம் பிரபு கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதில்லை. ஏன்..? அவரே அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட குடிப்பதில்லை. ஏன் என்பதுதான் இந்தப்படத்தில் இயக்குநர் ராஜ் தீப் சொல்லியிருக்கும் புதுமை.

படத்தின் ஆரம்பத்தில், ஓடும் ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு விக்ரம்பிரபு கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட…

Read More

வால்டர் திரைப்பட விமர்சனம்

by by Mar 13, 2020 0

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார்.

இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல்…

Read More

வெல்வெட் நகரம் திரைப்பட விமர்சனம்

by by Mar 9, 2020 0

கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. 

படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட கார்ப்பரேட் கம்பெனி ஒன்று முயல, அதைக் கண்டுபிடித்துவிடும் சமூக ஆர்வலர் கஸ்தூரி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்கிறார். அதனாலேயே கொலையாகிறார். ஆனால், சமயோசிதமாக அதை பத்திரிகையாளர் வரலஷ்மி வசம் சொல்லிவிட்டுச்…

Read More

இந்த நிலை மாறும் திரைப்பட விமர்சனம்

by by Mar 8, 2020 0

குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.

ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம். 

இந்தப்படத்தில் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு வழக்கமாக இருக்கும் வேலைச்சுமையையும், அதிகாரிகளின் கெடுபிடியையும் முன்னிறுத்தி சொந்தத் தொழில் தொடங்கும் போக்கை முன்னிறுத்துகிறார் அவர். அப்படி ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும்,…

Read More

எட்டுத்திக்கும் பற திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2020 0

இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது.

இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

உலகறிந்த தருமபுரி இளவரசன் – திவ்யா திருமணத்தால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தையும், அதையடுத்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கும் அவர், காதல் என்பது…

Read More

ஜிப்ஸி திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by by Mar 6, 2020 0

அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். ராஜு முருகனைப் படித்தவர்கள் அவர் நல்ல படங்களைத் தரவல்லவர் என்பதைப் படம் இயக்குவதற்கு முன்பே தெரிந்து வைத்திருந்த கூட்டம்தான் அது.

ஏனென்றால், எழுத்து, இசை, திரைப்படம், பாடல்கள் இயற்றுதல் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு கொண்டவைதான். அடிப்படை, உந்த வைக்கும் உணர்ச்சி மட்டுமே. தன் கலையில் சரியாக உணர்ச்சியைக் கடத்தத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளைத் தர இயலும்.

அதைத் தன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என்று இரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்தார் அவர்….

Read More

காலேஜ் குமார் திரைப்பட விமர்சனம்

by by Mar 6, 2020 0

ஒரு இந்திய மொழியில் வெற்றிபெற்ற கதைக்கு எப்போதுமே பிற மொழித்தயாரிப்பில் முதலிடம் உண்டு. அப்படி மூன்று வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் தயாராகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் இந்த ‘காலேஜ் குமார்’.

குடும்ப உறவுகளும், கல்விச் சிக்கல்களும் அதிகமாகி வரும் இக்காலக்கடத்தில் இப்படத்தின் கதை முக்கியத்துவம் பெறுகிறது. முயற்சி இருந்தால் எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்பதையும், அதே நேரம் கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்று கொள்ளாமல் கல்வியை மாணவர்களின் முதுகில் சுமையாக…

Read More

திரெளபதி திரைப்பட விமர்சனம்

by by Feb 29, 2020 0

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.

மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுவதுதான் படம்.

பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரிச்சர்டுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் படம் இது . அன்பு கொண்ட கணவராகவும்,…

Read More