February 1, 2026
  • February 1, 2026
Breaking News

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

by by Feb 17, 2025 0

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. 

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார். 

இந்தத் திரைப்படம் – அதிரடியான ஆக்சன் காட்சிகள்-…

Read More

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

மார்வெல் ஸ்டுடியோஸ்- இல் இருந்து வந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா தொடரின் நான்காவது படம் இது.

ஒரு காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த போது சூப்பர் ஹீரோக்களைத் துரத்திய ராஸ் இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கிறார். முன்பு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை என்று நினைத்தவருக்கு இப்போது அதன் தேவை புரிகிறது. 

அதனால் இதில் கேப்டன் அமெரிக்காவை அழைத்து புதிய அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கச் சொல்லி கேட்டுக்கொள்கிறார்.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் திடீரென தோன்றிய செலஸ்டியல் தீவில் இருக்கும் புதிய சூப்பர் மெட்டலான…

Read More

ஒத்த ஓட்டு முத்தையா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

முன்னாள் நகைச்சுவை அரசன் கவுண்டமணியையும், இந்நாள் நகைச்சுவை இளவரசன் யோகி பாபுவையும் இணைத்து விட்டால் அது எத்தகைய வெற்றியை பெறும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைப் படம்.

அது நடந்ததா பார்க்கலாம். 

வீடு, வாசல், அன்பான மனைவி என்று வாழ்ந்து வரும் அரசியல்வாதி கவுண்டமணி ஒரு தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய காரணத்துக்காக ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். அவரது கார் டிரைவராக யோகி பாபு இருக்கிறார்.

தன் வாழ்வில் நடந்த ஒரு சோகத்தின் காரணமாக மணமாகாத…

Read More

கண்நீரா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

இந்தக் காதலர் தினத்துக்கு மலேசியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ்ப் படம். 

கதிரவென் மற்றும் சாந்தினி கவுர் ஜோடி காதலர்களாக இருக்கிறது. அதேபோல் நந்தகோபால் மற்றும் மாயா கிளம்மி காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் காதல்தான் கதையா என்றால் இல்லை.

முதல் ஜோடியில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கதிரவென் தங்கள் திருமணத்துக்காக சாந்தினி கவுரை தயார்படுத்த நினைக்கிறார். ஆனால் சாந்தினியோ மேற்படிப்பு முடித்து வாழ்க்கையில் உயர்ந்த பிறகுதான் கல்யாணம் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறார். இதில் இருவருக்கும் சற்று…

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by by Feb 15, 2025 0

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர்….

Read More

என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான் – அதர்வா

by by Feb 14, 2025 0

*Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!*

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் திரையுலகில்…

Read More

எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார் – விஷால் பரவசம்

by by Jan 17, 2025 0

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி…

Read More

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!

by by Jan 6, 2025 0

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !!

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”. படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின்…

Read More

MAX திரைப்பட விமர்சனம்

by by Dec 31, 2024 0 In Uncategorized

ஒரு அதிதி புதிரியான ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நம்மையும் கவலைப்பட விட முடியாத அளவுக்கு அப்படி ஒரு ‘மாஸ் பேக்கேஜ்’ கொடுத்து இருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதற்கு பின்னால் எல்லாம் காடு. அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இந்த போலீஸ் ஸ்டேஷன் என்பது சென்னையில் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

அந்த போலீஸ் ஸ்டேஷனில்…

Read More

விலங்குகள் மீதான போரை நிறுத்தும் வரை நமக்குள் அமைதி இருக்காது – மேனகா சஞ்சய் காந்தி

by by Dec 19, 2024 0

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்
திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

 
கனா புரொடக்சன்ஸ் சார்பில்…

Read More