October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கொழு கொழுவென்று இருக்கும் நடிகைகளை மக்களுக்குப் பிடிக்கும் – பேரரசு

by by Jul 16, 2024 0

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,

“இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள…

Read More

சதுர் டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் – படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!

by by Jul 16, 2024 0

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”. 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர்…

Read More

டீன்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2024 0

சமீப காலமாகத் தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசங்களைக் காட்ட முயற்சிக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான கதைக்களத்தை முயற்சித்திருக்கிறார்.

அமானுஷ்யமாகத் தொடங்கி அறிவியல் பூர்வமாக முடியும் ஒரு புனைவுக் கதை இது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின் பருவம் மிகவும் முக்கியமானது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் ஆகும் இந்தப் பருவ மாற்றம் நிகழ ஆரம்பிக்கும் பருவத்தில் இருக்கும் 13 சிறுவர் சிறுமியர் தாங்கள் பெரியவர்களாகி விட்டதாக நினைக்கின்றனர். 

வீட்டிலும், பள்ளியிலும் தங்களை…

Read More

என் காதல் நிக்கோலய்; என் உயிர் சினிமா – வரலட்சுமி சரத்குமார்

by by Jul 15, 2024 0

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என்…

Read More

LONGLEGS அமெரிக்கத் திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2024 0

இந்த சீசனில் வந்த அதி பயங்கரமான படம் என்கிற முன்னறிவிப்பு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்தது. 

அமானுஷ்யம் கலந்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் – ஹாரர் படத்தை ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கி இருக்கிறார்.

இதில் மைக்கா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். FBI – யில் புதிதாக பணிக்கு வரும் மைக்கா மன்றோ ஒரு சவாலான புலன் விசாரணையை ஏற்க நேர்கிறது. 

அதன்படி புறநகர் பகுதிகளில் தன் குடும்பத்தை கொடூரமாகக் கொள்ளும் குடும்பத்…

Read More

இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2024 0

காந்தி தாத்தா அகிம்சையால் இந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால் நேதாஜி வழிவந்த இந்த இந்தியன் தாத்தா நிறைய இம்சைகள் செய்து ஊழல்வாதிகளை களை எடுத்தார் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். 

சொந்த மகனே ஆனாலும் அவன் ஊழலுக்கு துணை போனால் அவனையும் கொல்வேன் என்று பெற்ற மகனையே கொன்றுவிட்டு முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார்.

அப்போது லட்சக்கணக்கில் ஊழல் நடந்து கொண்டிருந்த இந்தியாவில் இப்போது கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யம்…

Read More

ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான் – ‘பன் பட்டர் ஜாம்’ நாயகன் ராஜு

by by Jul 9, 2024 0

*கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு*

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்
‘பன் பட்டர் ஜாம்’.

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,

பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

Read More

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

by by Jul 8, 2024 0

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன்…

Read More

இந்தியன் 2 பற்றி எல்லோருக்கும் எழுந்த கேள்வி எனக்கும் இருந்தது – கமல்

by by Jul 7, 2024 0

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர்,…

Read More

ககனச்சாரி மலையாளத் திரைப்பட விமர்சனம்

by by Jul 7, 2024 0

பலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து. 

எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250. 

எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான்.

படத்தின் கதை இன்னும் 20, 30 வருடங்கள் கழித்து…

Read More