October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

எக்ஸ்ட்ரீம் திரைப்பட விமர்சனம்

by by Jan 3, 2025 0

இதுவும் கிரைம் திரில்லர் வகைப் படம்தான். ஆனால் நாகரீகம் என்பது எல்லை மீறிப் போகும்போது என்ன ஆகும் என்பதை ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்க விட்டுச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

கிரைம் திரில்லர் வகைப் படங்களுக்கே உரிய இலக்கணமாக ஒரு கட்டுமானம் நடக்கும் இடத்தில் இளம்பெண்ணின் உடல் ஒன்று முகம் சிதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுகிறது.

விசாரணையில் அது அபி நட்சத்திராவின் உடல்தான் என்று உறுதி ஆகிறது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தன் தாயுடன் வசித்து வருகிறார்…

Read More

சீசா திரைப்பட விமர்சனம்

by by Jan 3, 2025 0

வழக்கமாக சீசா என்றால் நமக்கு பாட்டில்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதுவல்ல. மேலும் கீழும் இறங்கி ஆடும் சீசா பலகையைத்தான் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் குணா சுப்பிரமணியம். 

இப்போதைய ட்ரெண்டின் படியே கொலையும், அதைச் சார்ந்த குற்றப்புலன் விசாரணையும் தான் கதைக்களம். ஆனால் ஏன் நடந்தது… எப்படி நடந்தது என்பதில்தான் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்கள். 

இந்தப் படத்தில் வெறும் விசாரணை என்றில்லாமல் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும்…

Read More

ஷாம் நாயகனாகும் அஸ்திரம் படத்தை பிப் 21- ல் வெளியிடும் பைவ் ஸ்டார்

by by Jan 2, 2025 0

*’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.*

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக…

Read More

லாரா திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2025 0

காக்கிச்சட்டையின் தீரம் சொல்லும் கதைகளும், புலன் விசாரணைக் கதைகளும் எந்தக் காலத்திலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. இந்த உண்மையைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி, ஒரு கிரைம் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

காரைக்கால் பகுதியில் நடக்கிற கதையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாறை இடுக்கில் கரை ஒதுங்குகிறது.  சில நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பதால் அந்தப் பெண்ணின் முகத்தை மீன்கள் கடித்துக் குதறி அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியைக் காணவில்லை…

Read More

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்க பெண் இயக்குனரின் புதிய படம் விரைவில்…

by by Jan 2, 2025 0

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. 

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம்…

Read More

பயாஸ்கோப் திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2025 0

பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார்.

ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம் விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தினால் கவரப்பட்ட இயக்குனர் சேரன் அதை வெளியிட பெரு முயற்சி எடுத்தார். 

வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பல முனையில் இருந்தும் பாராட்டுப்…

Read More

கலன் திரைப்பட விமர்சனம்

by by Jan 1, 2025 0

வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் மதுரையே களமாக இருந்தது. சமீப காலமாக வடசென்னை இந்தக் களத்தைப் பிடித்திருக்கிறது. 

இதிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வீர முருகன்.

அத்துடன் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் போதை கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற செய்தியையும் முன்மொழிகிறார் அவர். 

சிவகங்கையில் தன் தம்பி அப்புகுட்டி மற்றும் மகன் யாசருடன் அன்பே…

Read More

ராஜா கிளி திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2024 0

எப்போதுமே உண்மைக் கதைகளைத் தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த ராஜா கிளி படமும் அமைகிறது. 

நாம் நன்கறிந்த பெரும் தொழிலதிபர், பெண்கள் மீது கொண்ட சபலத்தினால் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்பு இழந்து சிறைக்குச் சென்று பின்னர் உயிர் விட்டார் என்பதை அடி நாதமாக வைத்துக் கொண்டு அதில் பாதிக்கு மேல் கற்பனையைச் சேர்த்து ஒரு சுவாரசியமான கதையை நமக்கு தந்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தம்பி…

Read More

ஸ்மைல் மேன் திரைப்பட விமர்சனம்

by by Dec 27, 2024 0

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள்.

கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து, சிரிப்பது போல் வைத்து விடுவது அவனுடைய ஸ்டைல். ஒரு கட்டத்தில் அவன் கொல்லப்பட்டதாக அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சரத்குமாரின் உயர் அதிகாரி சுரேஷ் மேனன். அவரும் கொல்லப்படுவதை…

Read More

மழையில் நனைகிறேன் திரைப்படம் விமர்சனம்

by by Dec 27, 2024 0

கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை. 

நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப் படிப்பையும் முடிக்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார். 

ஒரு சுபயோக சுப தினத்தில் மழையில் நனையும் நாயகி ரெபா மோனிகா ஜானைப் பார்த்த அன்சன்,…

Read More