தான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்…
“ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது.
திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வட்டிக்கு…
Read More
உலக அளவிலேயே குழந்தைகளுக்கு நம் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு விஷயம், ‘துன்பம் நேர்கையில் ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பார்…’ என்பதுதான். ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ‘குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் ஹீரோக்கள்தான்…’ என்று முதல் குரலெடுத்து உரக்கச் சொல்கிறது இந்தப்படம்.
விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டிருக்கும் படத்தில் அப்துல்கலாமின் அறிவுரைகளும் இடம்பெறுவதுடன் குழந்தைகளுக்கு ‘குட் ஹேபிட்’, ‘பேட் ஹேபிட்’ என்று சொல்லித்தந்து கொண்டிருந்த நாம் இன்று ‘குட் டச்,…
Read More
‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’, ‘மகளிர் மட்டும்’ படங்களில் தனித்துவமாக நடித்த பாவெல் நவகீதன் இப்போது ‘பேரன்பு’ படத்திலும், ‘வட சென்னை’யிலும் நடித்திருக்கிறார். தன்னைப் பற்றி அவர் கூறியது…
“எனது ஊர் செங்கல்பட்டு. அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஆனாலும் படிப்பு ஏறவில்லை. எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VIS COM படிக்க வையுங்கள் என்றார்.
லயோலாவில் முயற்சி செய்தோம். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ‘சமூகவியல்’தான் கிடைத்தது. இரண்டாம்…
Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து…
“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களைக் கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால், அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது…
Read More
‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம்.
இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள்.
அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன், G. தனஞ்ஜெயன் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பாக பாடல்…
விஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.
“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.
சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு…
Read More