தொட்டு விடும் தூரம் திரைப்பட விமர்சனம்
சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு வாழ்த்து சொல்லலாம்.
அது மட்டுமல்லாமல் அந்தத் தலைப்புக்குள் ஒரு காதல் கதையையும், அனைவரும் பின்பற்றக் கூடிய ஒரு…
Read More
40 ஆண்டு அனுபவத்தில் தமிழ் சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் – டிஆர்
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர்.
சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.காளையப்பன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பாபுராவ் ஆகியோருக்கும், வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை…
Read More
அரசியல் பழக சொல்லும் கல்தா திரைப்படம்
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், மாமிச கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது
ஆனால், இது பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததோடு, இது குறித்து வெளி உலகிற்கும் தெரியாமல் போகிறது.
அதே சமயம், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அதற்கு யாரெல்லாம காரணமாக இருக்கிறார்கள், என்பதை வெளி உலகத்திற்கு காட்டும் நோக்கில் உருவாகியிருக்கிறது ‘கல்தா’.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், மற்றொரு ஹீரோவாக சிவ நிஷாந்த்…
Read More
இனி நான் ஸ்ருதிகா சனீஷ் – நாதஸ்வரம் ஸ்ருதிகா திருமணம்
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்வைத் தொடங்கி, பின்னர் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா மேலும் சில படங்களில் நாயகியாக நடித்தார்.
எதிர்பார்த்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் போனவருக்கு திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடிக்க அதிர்ஷ்டம் அடித்தது. நாதஸ்வரம் ஸ்ருத்திகா என்றே அறியப்பட்டவர் தொடர்ந்து திருமுருகனின் ‘குல தெய்வம்’, ‘கல்யாண…
Read More
நண்பனுக்காக படம் தயாரித்த தொட்டுவிடும் தூரம் தயாரிப்பாளர்
சில சமயங்களில் சினிமாக் கதைகளைவிட அந்த சினிமா தயாரான பின்னணிக் கதை சுவையானதாக இருக்கும். அப்படித்தான் அமைந்திருக்கிறது உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படம்.
படம் என்னவோ காதல் கதையைச் சொன்னாலும் இந்தப்படம் ஆரம்பித்த புள்ளி நட்பிலானது. தயாரிப்பாளர் ராமநாதனும், இயக்குநர் நாகேஸ்வரனும் பள்ளிக்கால நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் ராமநாதன் வீட்டில்தான் நாகேஸ்வரன் வளர்ந்தார் எனும் அளவுக்கு இருவரும் நண்பர்கள். காலப்போக்கில் இருவரும்…
Read More
ரா பார்த்திபனின் அடுத்த சாதனைப்படம் இன்று தொடக்கம்
புதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம்.
புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது.
…
மாஸ்டர் படத்தில் விஜய் குடிகாரர் ஆக வருகிறாரா?
இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான்.
மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக அச்சாகவில்லையோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள் ஆனால் திட்டமிட்டபடி தான் அப்படி விஜய் முகம் கலங்கியவாறு இருப்பதா க வைக்கப்பட்டுள்ளதாம்.
அது ஏன் என்றால்…
Read More
வெப் சீரிஸ் போன தமன்னா வெகுண்டெழுந்த ஸ்ரீ ரெட்டி
இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது.
அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து…
Read More