April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ
January 25, 2020

நடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ

By 0 676 Views

இயக்குநர் என்.கே.கண்டி என்பவர் ‘டே நைட்’ படத்தை வெறும் பத்து லட்ச ரூபாயில் எடுத்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..?

சிம்பு நடிக்க டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ நினைவிருக்கிறதா..? இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தை மையமாக  வைத்து ‘எள்ளாளன்’ என்ற படத்தை நந்து இயக்கினார். இப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும், பிரான்ஸ், கனடா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த நந்துதான் கண்டியாகி டே நைட் இயக்கியிருக்கிறார்.

அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். 

மர்டர் மிஸ்டரி ஜானர் படமான இப்படத்தில் பாடல்கள் இல்லை. அதே சமயம், படத்தில் வரும் திகிலும், திருப்பங்களும், திரைக்கதை அமைப்பும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவிலும் இடம் பெற்றதே இல்லை, என்று இயக்குநர் கண்டி தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் என்.கே.கண்டி, சினிமாவில் தான் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துள்ளேன் என்பது குறித்து கூறியதோடு, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் விஷால் குறித்து கிழி கிசி என்று கிழித்தார்.

அத்துடன் ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிப்பதாக கூறி, 7 நடிகைகளுடன் செக்ஸ் டீலிங் போட்டாராம். அதற்காக அந்த தயாரிப்பாளரே 7 நடிகைகளை கொண்ட ஆட்டோகிராப் பாணியில் ஒரு கதையையும் எழுதி, அதை இயக்குநர் கண்டியை இயக்க சொன்னாராம்.

அதில் சில நடிகைகளை சூறையாடிய அந்த தயாரிப்பாளர் இப்போது இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் மற்றும் நடிகைகள் யார் என்ற ரகசியத்தையும் இயக்குநர் கண்டி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசிய அந்த வீடியோவை பாருங்க…

Courtesy – Cinemainbox.com