March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது
January 27, 2020

ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது

By 0 830 Views

‘பூவரசம் பீப்பி’ மூலம் அறிமுகமான பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். அதில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆவர், தனது அடுத்த படமான ‘சில்லுக் கருப்பட்டி’யில் அதிகப் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரது அடுத்த படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை ?

ஆனால் அதுதான் உண்மை. ஹலிதாவின் அடுத்த படமான ‘ஏலே’ வெகுவிரைவில் வெளியாகப் போகிறதாம். அதை ஹலிதாவை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. இவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து சினிமாவை கற்றுக் கொண்டவர்தான் ஹலிதா சமீம்.

‘விக்ரம் வேதா’ தந்த வெற்றிக்குப் பிறகு, தற்போது புதிதாக ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் முயற்சியாக ‘ஏலே’ படம் குறித்த அறிவிப்பை மே 2-ம் தேதி வெளியிட்டனர் புஷ்கர் காயத்ரி.

Pushkar Gayathri produces film for Halitha Shameem

Pushkar Gayathri produces film for Halitha Shameem

தங்கள் பெருமைமிகு சிஷ்யை ஹலிதா டைரக்‌ஷனில் அன்றைய தினமே படப்பிடிப்பும் தொடங்கப்பட் டது.

ஒரே ஷெட்டியூலில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் ஜூன் 30-ம் தேதியுடன் முடித்துவிட்டார்கள். இதில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ளனர். முழுக்க காமெடிப் பின்னணியில் ‘ஏலே’ கதையை உருவாக்கி இருக்கிறாராம் ஹலீதா ஷமீம்.

இது குறித்து இயக்குநர் ஹலிதா ஷமீம், “ ஒரே மூச்சாக படத்தை முடித்தது பிரமிப்பை தருகிறது. ஒரு முழு யூனிட்டின் அர்ப்பணிப்பின்றி இது நடந்திருக்க இயலாது…” என்று பெருமூச்சுடன் தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் ‘ஏலே’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது.. விரைவில் வெள்ளித் திரைக்கும் வந்து விடுமாம்.

இந்த ‘ஏலே’ படத்தை முதல் காப்பி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.