September 15, 2026
  • September 15, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by by Aug 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.

(அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.)

அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும்.

கதை இதுதான். தந்தை…

Read More

விருமன் திரைப்பட விமர்சனம்

by by Aug 12, 2022 0

ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.
 
ஏற்கனவே கொம்பனில் கார்த்தியின் கொம்பைச் சீவிவிட்ட அவர், இப்போது விருமனிலும் அவரை வீறு கொண்டு எழ வைத்திருக்கிறார்.
 
குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள்…

Read More

எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்

by by Aug 11, 2022 0

இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும் போக்கும்தான்.

அப்படி ஆஹா ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ்தான் எமோஜி. மனித மன உணர்வுகளை எப்படி எமோஜிகள் பிரதிபலிக்கின்றனவோ அப்படியே இளைஞர்கள் சிலரின் வாழ்வில்…

Read More

சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2022 0

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ இந்து மதப்பற்றுள்ளவர் இயக்கிய படமாகத் தோன்றலாம். அதனாலேயே இந்தப்படத்தின மீதான நம்பகத் தன்மை குறையலாம். ஆனால், படம் பார்த்த பின் அந்தக் கணிப்பு சுக்கு நூறாக உடையும்.

ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் மதங்களைக் கடந்த, அத்தனை சீக்கிரம் காலத்தால் மறக்க முடியாத படம் இது.

சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதலையும் வீரத்தையும் நமக்குத் தெரிந்த சரித்திரப் பின்னணியில் சொல்ல முடிந்தால் அதுதான் சீதா ராமம்.

காதலின் வீரியம் கடிதத்தில் பன் மடங்காக ஆகும்…

Read More

வட்டகரா திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2022 0

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை…

தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…” என்று வாலி எழுதிய வைர வரிகள் இவ்வுலகத்திற்கு எப்போதும் பொருந்தும்.
 
அப்படி பணம் இருந்தால் மட்டுமே தங்களால் வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற பரிதவிப்பில் இருக்கும் நால்வர் ஒரு கட்டத்தில் ஒன்று சேர அவர்கள் பணத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிதான் இந்த படம்.
 
நெடுஞ்சாலை ஒன்றில் புலரும் பொழுதில் காருக்குள் உறங்கும் நால்வரில் கண்விழித்து எழும் கண்ணன் மாதவன் உடன்…

Read More

லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Aug 6, 2022 0

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதால் இது ஏதோ ஆங்கிலப் படம் என்று நினைத்து விட வேண்டாம். மலையாளம் வழியாக தமிழ் பேசி வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான் இது.

வேறு வேறு துறையில் இருக்கும் நால்வர் பகுதி நேர தொழிலாக அசைன்மென்ட் பெற்று பெரிய வீடுகளில் டாகுமெண்ட்களைக் கொள்ளையடிக்கும் வேலையும் செய்து வருகிறார்கள்.. அப்படி ஒரு பெரிய வீட்டில் ஒரு பொருளைத் தேட போன இடத்தில் அசந்தர்ப்பமாக அந்த வீட்டில் படித்துக் கொண்டிருந்த சிறுமியை பாதுகாப்பு கருதி கொல்ல…

Read More

எண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்

by by Aug 5, 2022 0

இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை.

இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்து இருக்கிறது.

ஆனால் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் படம் என்றால் அவனுடைய அறிமுகமே அதிபுதிரியாக இருக்கும். இதில் அவர் ஒரு எளிய மனிதன் என்று காட்டுவதற்காக இயல்பான ஒரு…

Read More

பொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்

by by Aug 5, 2022 0

காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான் என்பது உலகுக்கு தெரியும். ஆனால் அவரை ஒற்றைக் காலுடன் வாழ்பவராகக் காட்டுவதற்கு இயக்குனருக்கு எப்படித்தான் மனது வந்ததோ? விபத்தில் ஒரு காலை இழந்த பிரபுதேவா தன் ஒற்றைக் காலுடன் வாழ்ந்து வர அவரது வாழ்க்கையின் பிடிப்பாக…

Read More

லெஜண்ட் ‘ சரவணனுக்கு ஒரு கடித விமர்சனம்…

by by Aug 1, 2022 0

நீங்க டாம் குரூஸா இல்ல டாம் அண்ட் ஜெர்ரியா..?

சரவணன் அண்ணாச்சி… வணக்கம்… வாழ்த்துக்கள்..! நான் உங்க லெஜண்ட் படம் பார்த்தேன். அந்த ஆர்வம் தாள மாட்டாமதான் இந்தக் கடிதத்தை எழுதறேன்…

நீங்க ஜெயிச்சிட்டீங்க… உங்க கனவை… ஆசையை… பெரிய திரையில்… உங்க பாணியிலேயே சொல்லப்போனா பிரம்மாண்டமாய்… அதுவும் உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்ததில நீங்க ஜெயிச்சிட்டீங்க…

அதே மாதிரி எங்க எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிட்டீங்க… அதாவது உங்களுடைய விளம்பர படங்கள்ள உங்கள ஹீரோவா பார்த்து, அடுத்து உங்க…

Read More

குலு குலு திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2022 0

சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் 50/50 என்ற அளவில்தான் அவர் ஹீரோயிஸத்தையும், நகைச்சுவையையும் கலந்து கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால், இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே இவ்வளவு சீரியஸான ஒரு படத்தை நாம் பார்த்ததில்லை.

 
ஒரு உலக அரசியல் பேசும் கனமான படம் இது. மொழி தெரியாதவர்களின் அவஸ்தையையும், ஒரு மொழி அழிக்கப்பட்டால்…

Read More