கல்கி 2898 ஏடி திரைப்பட விமர்சனம்
நம் நாட்டு இதிகாசங்களைச் சுட்டு ஹாலிவுட் காரர்கள் நிஜத்தை விஞ்சும் கற்பனையில் படங்களை எடுத்துக் கொண்டிருக்க, இப்போதுதான் நம்மவர்கள் கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.
இந்து மத நம்பிக்கையின்படி திருமால் எடுக்கும் தசாவதாரங்களில் அத்தனை அவதாரங்களும் முடிந்துவிட இன்னும் மிச்சம் இருப்பது கல்கி என்கிற அவதாரம் மட்டுமே.
அந்த அவதாரம் நிகழவிருப்பதை எதிர்காலத்துக்குச் சென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாக்…
Read More
ரயில் திரைப்பட விமர்சனம்
இன்றைக்குத் தலையாய பிரச்சனையாக இருப்பது பிழைப்பு தேடி தென்னிந்தியா வரும் வட மாநிலத்தினரின் பெருக்கம்தான்.
தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இங்கு இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் குறைந்த கூலிக்கு ஒத்துக்கொண்டு வேலை செய்யும் அவர்களால் இங்குள்ளோரின் வேலை வாய்ப்புகள் நிறையவே பாதிக்கப்படும் சூழலில்… அதற்கு எதிரான கருத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது படம்.
தேனியில் வசிக்கும் குங்குமராஜ் முத்துசாமி மின் பழுது நீக்குபவராக இருந்தாலும் சரியாக வேலைக்கு போகாமல் நடத்தையில் பழுது பட்டு இருப்பதுடன் குடிக்கு…
Read Moreமகாராஜா திரைப்பட விமர்சனம்
ஒரு காலத்தில் அம்மா – மகன் உறவைப் பெருமைப்படுத்தும் பாசக்கதைகள் பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டிருந்தன. இப்போதைய ட்ரென்ட் அப்பா – மகள் பாசக் கதைகள்தான்.
இந்தப் படத்தில் மகளை ஒரு இளவரசியாக வளர்த்து வரும் மகாராஜா என்கிற அப்பாவின் கதையைச் சொல்லி இருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
மகளைத் தலை மீது வைத்துத் தாங்கும் மகாராஜாவாக விஜய் சேதுபதி. அவருக்கு இந்த மகாராஜா மகுடம் சூட்டியிருப்பதில் இன்னொரு விசேஷம் இது சேதுவின் ஐம்பதாவது படம்…
Read More
தண்டுபாளையம் திரைப்பட விமர்சனம்
எம்ஜிஆர் நடித்து பாதியில் நின்ற ஒரு படத்தின் காட்சிகளைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் தானும் ஒரு கேரக்டராகி ரகசிய போலீஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து ஆச்சரியப்படுத்தினார் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.
அதே டெக்னிக்கில் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் – இயக்குனர் – ஹீரோ – டைகர் வெங்கட்.
கர்நாடகாவை கலக்கிய எட்டு பேர் கொண்ட கொலைகார கொள்ளைக் கும்பல் ஒன்றைப் பற்றி 2012 ஆம் வருடம் ‘ தண்டு பால்யா ‘ என்ற…
Read More
காழ் திரைப்பட விமர்சனம்
வேலைக்காக வெளிநாட்டில் சென்று வாழ்பவர்களைப் பார்த்து, “அவர்களுக்கு என்ன..? டாலர்களில் சம்பாதித்து மேட்டிமை வாழ்வை ருசிப்பவர்கள்.!” என்று சொல்லப்படுவது உண்டு.
ஆனால் அங்கு இருக்கும் எல்லோருமே அப்படி சுகபோகத்தில் திளைப்பதில்லை – அங்கு வாழவும் வாழ்க்கை வசதிகளைப் பெறவும் எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்கிறது என்பதை ஒரு சில தமிழ்க் கதாபாத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் மோகன்ராஜ் விஜே.
முழுக்க ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களை முன்வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.
அங்கு தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கும் யுகேந்திரன் வாசுதேவன்…
Read More
அஞ்சாமை திரைப்பட விமர்சனம்
அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்றால் அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் என்று சொல்லும் படம்தான் இது. இதற்கு ‘அஞ்சாமை’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பது மெத்தப் பொருத்தம்
அதற்கு இயக்குனர் சுப்புராமன் தேர்ந்தெடுத்திருக்கும் களம், மருத்துவக் கல்வி கற்க அத்தியாவசியமானதாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தகுதித் தேர்வு.
நீட் தேர்வு முறையை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களும்… குறிப்பாக நாட்டு மக்களும் எதிர்த்து வரும் நிலையில் அது வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எல்லாம்…
Read More
BAD BOYS: RIDE OR DIE ஆங்கிலப் பட விமர்சனம்
போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான முதல் ‘Bad Boys’ 1995ல் வெளியானது. அதுவே ‘பேட் பாய்ஸ் 2 மற்றும் மூன்றாவது பாகங்களைத் தந்தது.
இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்.
‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இப்போது வெளியாகியுள்ள ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்!
நான்காவது பாகம் என்பதால் முந்தைய படங்களை விட…
Read More
குற்றப் பின்னணி திரைப்பட விமர்சனம்
தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை.
பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்.
இந்த கொலை வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அதே பாணியில் அங்கு வசிக்கும் தம்பதியைக்…
Read More
அக்காலி திரைப்பட விமர்சனம்
வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது.
போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும் ஒரு கும்பலை பற்றியது.
அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள் எழ, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போக, என்னதான் நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்னரே அந்த…
Read More
கருடன் திரைப்பட விமர்சனம்
சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது.
படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான்…
Read More