May 8, 2024
  • May 8, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஜெயில் திரைப்பட விமர்சனம்

by by Dec 9, 2021 0

தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லும் இயக்குனர் வசந்தபாலன் இந்தப்படத்தில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் பூர்வகுடிகளின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்லி இருக்கிறார்.

நகர வளர்ச்சியில் இந்த நகரின் பூர்வகுடிகள் நகருக்கு வெளியே குடியமர்த்தப் படுவதால் அவர்களின் கல்வி, வாழ்க்கை தரம், தொழில் வாய்ப்பு எல்லாமே பறி போய் விடுவதை ஒரு கண்ணீர்க் கதையுடன் நம் முன் விரிக்கிறார் அவர்.
 
சென்னையின் பூர்வகுடிகளான சென்னைத் தமிழர்கள் நகர விரிவாக்கத்தின் விளைவாக சென்னைக்கு…

Read More

பேச்சிலர் திரைப்பட விமர்சனம்….

by by Dec 4, 2021 0

எல்லாத் தலைமுறையிலும் அடல்ட் கண்டெண்ட் என்று இளைஞர்களின் நாடி பிடித்து அவர்களது தற்கால முகங்களைக் காட்ட ஒரு இயக்குனர் கிளர்ந்து எழுந்து வருவார். அப்படி இந்தத் தலைமுறையில் கிளைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

இந்த அடல்ட் கண்டெண்ட் என்பதிலும் இரண்டு வகை உண்டு. இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களைக் கொச்சையாகக் காட்டிக் காசு பண்ண நினைக்கும் முரட்டு குத்து கூட்டம் ஒரு வகை. அவர்களைப் புறந்தள்ளி விடலாம்.

இன்னொரு வகை, கூடக் குறைய இல்லாமல் அப்படியே இளைஞர்களின் வாழ்வைப்…

Read More

மாநாடு திரைப்பட விமர்சனம்

by by Nov 26, 2021 0

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார்.

புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ மட்டுமல்லாமல் மேலும் இந்த படத்தின் கதையை ஒத்த படங்களின் லிஸ்ட்டை முழுவதும் சொல்லி “இந்தப் படங்களைப் போலவே என் வாழ்க்கையில்…

Read More

₹ 2000 படத்தின் திரைவிமர்சனம்

by by Nov 25, 2021 0

2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான்.

 
எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதைவிட மக்களுக்கு முக்கியமானது.
 
வழக்கமாக நாம் கடைகளுக்கு செல்லும்போது ரூபாய் நோட்டுகள் கசங்கி இருந்தாலோ அவற்றில் எழுதி இருந்தாலோ…

Read More

சபாபதி திரைப்பட விமர்சனம்

சந்தானம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி. ஆனால், அதில் கொஞ்சம் எல்லை மீறிப் போய் கடந்த படத்தில் சிறப்புத் திறனாளியை நக்கல் பண்ணப்போய் நிறைய விமர்சனங்களைப் பெற்றார்.

அதற்கு பிராயச்சித்தமாக இந்தப்படத்தில் அவரே சிறப்புத் திறனா லிளி யாக வந்து காமெடியை தாண்டிய குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு சபா(ஷ்)பதி என்று முதலில் பாராட்டி விடலாம்.

பிறவியில் இருந்தே வாய் திக்குவதால் பல பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார் சபாபதி என்ற சந்தானம். அவருக்கு சிறிய வயதில் இருந்தே ஆதரவான…

Read More

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) ஹாலிவுட் திரை விமர்சனம்

by by Nov 19, 2021 0

திடுக்கிட வைக்கும் ஆவிக் கதைகளில் திடீரென்று ஹாரர் காமெடி வகைக் கதைகள் வந்து நம்மை சிரிக்க வைத்தன அல்லவா..? அந்த ஐடியாவுக்கு இந்தப் படத்தின் மூலப்படத்தை முன்னோடியாகச் சொல்லலாம்.
 
1984-ம் வருடம்தான் இவான் ரெயிட்மனின் (Ivan Reitman) இயக்கத்தில் கோஸ்ட் பஸ்டர்ஸ் (Ghostbusters) வரிசையில் முதல் படம் வெளியானது. சிங்கம், புலியை எல்லாம் கிராபிக்ஸில் குழந்தைகளுக்குக் காட்டி அலுத்துப்போன வேளையில் அதன் அடுத்த கட்டமாக ஆவிகளையும், பேய்களையும் இப்படி சிஜிக்கு உள்ளாக்கி அவற்றையும்…

Read More

எனிமி திரைப்பட விமர்சனம்

by by Nov 7, 2021 0

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 
இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த ஸ்கிரிப்ட் அத்தனை வலிமை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே நல்ல ஸ்கிரிப்டை இனம் காணத் தெரியாத விஷாலும், ஆர்யாவும்  சேர்ந்து நடிக்கும் படத்துக்கு…

Read More

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

by by Nov 1, 2021 0

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே…

ஆனால் அவற்றில் நீதிக்காகக் கற்பனையைக் கலந்து சொன்ன கதைகளே அதிகம். உண்மையில் சமூக நீதி காக்கப்பட்ட சம்பவங்களைச் சொன்ன படைப்புகள் மிகச்சிலதுதான். அப்படி இப்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் ஒரு உண்மைச் சம்பவத்தை உக்கிரமும்,…

Read More

ஃபில்டர் கோல்ட் படத்தின் திரை விமர்சனம்

by by Oct 24, 2021 0

திருநங்கைகளை காமெடி காட்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டு இருந்தது ஒரு காலம். பிறகு ஒரு சில படங்களில் ஓரிரு கேரக்டர்களின மூலமும், வணிக ரீதியில் அல்லாத ஒரு சில படங்களில் திருநங்கைகளை முழுநீள படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முழுக்க திருநங்கைகளை பற்றிய வணிகரீதியான முதல் படம் இது என்று உறுதியாக சொல்ல முடியும். அதற்காக இந்த படத்தின் இயக்குனரும், முதன்மை நடிகையாகவும் ஆகியிருக்கும் விஜயபாஸ்கரைப் பாராட்டலாம்.

ஆனால் வணிகரீதியான படம் என்பதற்காக ஒரு வழக்கமான தாதாயிசம் கொண்ட…

Read More

அகடு படத்தின் திரை விமர்சனம்

by by Oct 24, 2021 0

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் அப்படித்தான். கொடைக்கானல் ரெசார்ட் மற்றும் காட்டுப் பகுதிகளில் நடக்கிறது கதை.

சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார் டாக்டர் விஜய் ஆனந்த். அதே போல் நான்கு இளைஞர்களும் சுற்றுலா வர அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கி நண்பர்களாகிறார்கள்.

Read More