1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக அவருக்குத் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்…
Read More
செங்குன்றம் ஞாயிறு பகுதியில் வசிப்பவர் கணேசன் (எ) மின்ட் கணேசன் (48). இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார்.
அந்நியன் திரைப்படத்தில் மிகவும் சவாலான காட்சியில் நடித்து கோமா நிலைக்கு சென்று, பின்பு குணமடைந்தார். மேலும் எந்திரன், கில்லி, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகனும் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு…
Read More
ஏற்கனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘, ‘ ஹரஹர மகாதேவி ‘ போன்ற ஆபாச படங்களை எடுத்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அந்த படம் தந்த தைரியத்தில் இப்போது ‘இரண்டாம் குத்து ‘ என்று அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆபாச குப்பையை இயக்கி முடித்திருக்கிறார்.
அதன் டீஸர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இரண்டாம் குத்து பட டீம் 12 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டதாக இறுமாப்புக்…
Read More
உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின்
வணக்கம்.
சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.
உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் சாதாரணமல்ல. பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
சினிமா…
Read More
இன்றைய கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தமிழிலும் தனுஷின் மாரி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.
கொரோனோ பரவலுக்கு பின்னான படப்பிடிப்பு தொடங்கியதும் இவர் ‘கலா ‘ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்துக்காக இன்று ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சுப் பகுதியில் பலமான அடிபட்டது. சற்று நேரம் கழித்து அவரது வயிற்றில் கடுமையான வலி ஏற்படவே மருத்துவமனை…
Read More
இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இயக்குனர் சீனு ராமசாமி வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அவருக்கு நேற்று தான் திருமணம் ஆனதாக பதிவாகி இருக்கிறது.
இதைப்…
Read More
கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.
தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’…
Read More