December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயக்குனரிடம் போனில் பேசி கதை ரெடி பண்ண சொன்ன ரஜினி – கசிந்த ஆடியோ
July 31, 2020

இயக்குனரிடம் போனில் பேசி கதை ரெடி பண்ண சொன்ன ரஜினி – கசிந்த ஆடியோ

By 0 671 Views

தமிழ் படத்தை இயக்க வந்திருக்கும் அத்தனை இயக்குனர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் செய்வதாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட ரஜினியே போன் செய்து ” எனக்கு ஒரு கதை தயார் பண்ணி வை…” என்று சொன்னால் அந்த இயக்குனரின் அதிர்ஷ்டத்தையும் திறமையையும் எப்படி பாராட்டுவது?

அப்படி ஒரு அதிர்ஷ்டக்கார டைரக்டராக ஆகியிருக்கிறார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

சமீபத்தில் OTTயில் ரிலீசான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி இப்போது தான் பார்க்க நேர்ந்ததாகவும் அருமையான படம் எனவும் இவ்வளவு லேட்டாக பார்த்ததற்கு சாரி எனவும் தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி போனில் கூறியது அந்த ஆடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

அத்துடன் ரஜினி தனக்கு ஒரு கதை யோசித்து சொல்லும்படியும் தேசிய சாமியிடம் கூறுகிறார். அதைக் கேட்ட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நெகிழ்ந்து போய் பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் திக்குமுக்காடி நன்றி மட்டும் சொல்கிறார்.

லீக் ஆன அந்த ஆடியோ கீழே…