
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.
அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.
டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற…
Read Moreதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்வது குறித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான சந்திப்பு நேற்று (ஜூலை 6) மாலை ஜூம் செயலி வழியே நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா, கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், தேனப்பன், ஜே.எஸ்.கே .சதீஷ் ஆகியோரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர்…
Read Moreவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார்.
வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.
ஆனால் கடந்த…
Read Moreநவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக்.
இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஈடுபாடு காட்டாமல் சினிமாவை விட்டு விலகினார்.
அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்க வந்த பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆக ‘ராவணன்’, ‘அநேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘Mr.சந்திரமெளலி’ உள்ளிட்ட…
Read Moreசினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன.
இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது…
Read Moreலாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.
அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட…
Read More