January 12, 2025
  • January 12, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கமல் அஜித் விஜய் படங்களின் பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி
August 10, 2020

கமல் அஜித் விஜய் படங்களின் பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி

By 0 520 Views

கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

மேலும் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை, சூர்யா நடித்த உன்னை நினைத்து, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சிம்பு நடித்த சிலம்பாட்டம், ஜெயம் ரவி நடித்த தாஸ், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநான் பல படங்களில் நடித்து நடிகராகவும் புகழ் பெற்றவர்.

இவரது மகனான அஸ்வின் ராஜா ‘கும்கி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்துள்ளார். அஸ்வினுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான சுவாமிநாதன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார்.

இது கோலிவுட்டை மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.