ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே…
பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்த ஆர்யா என்னை வெளுத்து விட்டான் – விஷால்
தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம்.
படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது:
என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட…
Read More
ஜெய் பீம் எனக்கு சவாலான திரைப்படம் – சூர்யா
இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது தெரிந்த விஷயம்தான். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன.
நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார்.
‘ஜெய் பீம்’ திரைப்படம் பற்றி சூர்யா கூறும்போது, “24 ஆண்டுகள் ஆகிவிட்டன…
Read More
ரஜினி உடல்நிலையில் இதுதான் பிரச்சினையாம்..!
நேற்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவரது உடல்நிலை பற்றி பல்வேறு யூக, வதந்திகளும் உலாவி வந்த நிலையில் ரஜினியின் குடும்பத்தினர் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அது வருமாறு…
ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாம்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில்…
Read More
நவம்பர் 2 ல் உலகம் முழுதும் 240 நாடுகளில் ஜெய் பீம்
ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார். அது ஒரு காவலர் பாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் பாத்திரமாக இருந்தாலும் சரி. இல்லை அடுத்த வீட்டு பையன் போல்…
Read More
தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்
அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடிச்சிருக்கார்.
அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.
எந்த நிறுவனமும் செய்ய துணியாததை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில், ‘நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது. நாம் அதை பின்பு கூட பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால்…
Read More
வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்
ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’.
இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன்மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்டதரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.
இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின்மூலமாக அறிமுகமான அபர்ணதி…
Read More
ஃபில்டர் கோல்ட் படத்தின் திரை விமர்சனம்
திருநங்கைகளை காமெடி காட்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டு இருந்தது ஒரு காலம். பிறகு ஒரு சில படங்களில் ஓரிரு கேரக்டர்களின மூலமும், வணிக ரீதியில் அல்லாத ஒரு சில படங்களில் திருநங்கைகளை முழுநீள படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் முழுக்க திருநங்கைகளை பற்றிய வணிகரீதியான முதல் படம் இது என்று உறுதியாக சொல்ல முடியும். அதற்காக இந்த படத்தின் இயக்குனரும், முதன்மை நடிகையாகவும் ஆகியிருக்கும் விஜயபாஸ்கரைப் பாராட்டலாம்.
ஆனால் வணிகரீதியான படம் என்பதற்காக ஒரு வழக்கமான தாதாயிசம் கொண்ட…
Read More
அகடு படத்தின் திரை விமர்சனம்
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலே ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதிலும் அப்படித்தான். கொடைக்கானல் ரெசார்ட் மற்றும் காட்டுப் பகுதிகளில் நடக்கிறது கதை.
சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் தன் மனைவி மற்றும் 14 வயது மகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார் டாக்டர் விஜய் ஆனந்த். அதே போல் நான்கு இளைஞர்களும் சுற்றுலா வர அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கி நண்பர்களாகிறார்கள்.