தண்ணி வண்டி படத்தின் திரை விமர்சனம்
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்
தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன்.
அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது.
தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில்…
Read Moreஓணான் படத்தின் திரை விமர்சனம்
இன்னொரு ராக்கி படம் போல் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் கொலைக் கள ஆரம்பம்.
நாயகன் திருமுருகன் சதாசிவம் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொள்வதுபோல் டைட்டில் போடும்போது காட்சிகள் விரிகின்றன.
தொடர்ந்து மனைவி குழந்தைகளைக் கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தியும் வருகிறது.
படங்களில் காமெடியனாக நாம் பார்த்திருக்கும் காளி வெங்கட் இந்தப் படத்தின் முதல் காட்சியில் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையில் பிளாஷ்பேக்கில் விரிகிறது.
டைட்டிலில்…
Read More
தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் திரை விமர்சனம்
பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன.
இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான்.
அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் வன்முறைக்கு…
Read More
அர்னால்டும் ஜாக்கி சானும் தமிழ் பேசி வரும் அயர்ன் மாஸ்க்
ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த “அயர்ன் மாஸ்க்” படம் வெளியீடு வலிமை’க்கு பிறகு வருகிறது!
சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த “அயர்ன் மாஸ்க்” ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது!
வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.!
டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா…
Read More
லேபர் திரைப்பட விமர்சனம்
‘இருந்தால் வேலை… இல்லாவிட்டால் சாலை’ என்று வாழும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி நம்பிக்கையால் மட்டுமே கட்டப்படுகிறது என்பதை கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வியலாகவே சொல்லி ஒளிப்பதிவும் செய்து இயக்கி இருக்கிறார் சத்யபதி.
அதனாலேயே பல சர்வதேச விழாக்களில் தேர்வாகவும், தேர்வாகி விருதுகளையும் வென்றுள்ளது படம். மக்கள் மனங்களை வெல்லுமா பார்க்கலாம்.
கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் முத்து தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படாமல் பட்டம் பெற்று இன்ஜினீயராக ஆக வேண்டும் என்று விரும்புவது ஒரு பக்கம் காட்சிப்படுத்தப்படுகிறது….
Read More
வேலன் திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு – Skyman Films International கலைமகன் முபாரக்
இயக்கம் – கவின்
நடிப்பு – முகேன், மீனாட்சி கோவிந்தராஜ், பிரபு, சூரி, ராகுல்
இசை – கோபி சுந்தர்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
தலைப்பைப் பார்த்தாலே அது ஹீரோவின் பெயர் என்பது தெரிந்து விடும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய அலப்பறை நாயகன் என்பது முதல் காட்சி பார்த்தால்தான் புரியும்.
பொள்ளாச்சியில் நடக்கிற கதையில் அன்று ப்ளஸ் டூ ரிசல்ட் வரவிருக்க, டீக்கடையில் டீ போடப்படவில்லை. டிரைவர் பஸ்ஸை எடுக்கவில்லை. கடைகள்…
Read More
மீண்டும் திரைப்பட விமர்சனம்
நீண்ட காலம் கழித்து இந்தப்படத்தை ‘மீண்டும்’ இயக்கியிருப்பதன் மூலம் களத்தில் இறங்கியிருக்கிறார் ‘சிட்டிசன்’ ஷரவண சுப்பையா. சிட்டிசன் சமயத்தில் அந்தப்படம் மூலம் தமிழில் ஒரு பரபரப்பைக் கிளப்பிய அவர் இந்தப்படத்திலும் ஒரு பரபரப்புடன் வந்திருக்கிறார்.
‘ஒரு மனைவி இரண்டு கணவன் : ஒரு மகன் இரண்டு தந்தை’ என்ற வாசகம்தான் அந்தப்பரபரப்பு ஏற்படக் காரணம். இந்தப்படமும் ஏதோ பிரச்சினையை முன்னெடுத்துச் சொல்லப்போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதைத் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறாரா என்று பார்ப்போம்.
நாயகன் கதிரவன்…
Read More