
தொட்டு விடும் தூரம் திரைப்பட விமர்சனம்
சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு வாழ்த்து சொல்லலாம்.
அது மட்டுமல்லாமல் அந்தத் தலைப்புக்குள் ஒரு காதல் கதையையும், அனைவரும் பின்பற்றக் கூடிய ஒரு…
Read More
நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்
96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.
அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது.
இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட ஹீரோ…
Read More
வி1 திரைப்பட விமர்சனம்
‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான்.
ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள்.
அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் இருக்க,…
Read More
சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார்.
காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை.
இந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு ‘பருவ’…
Read More
கைலா திரைப்பட விமர்சனம்
அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெண் எழுத்தாளர் ‘தானா’, பேய்கள் பற்றிய ஆராய்ச்சி குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார்.
அந்த ஆராய்ச்சிக்கு அவர் ஒரு ஆள் இல்லாத பங்களாவை தேர்ந்தெடுக்கிறார். அந்த பங்களா வாசலில் இரண்டு கொலைகள் நடந்து முடிந்திருக்க, அந்த கொலைகள் அங்கே தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் அவர் குழந்தை ஆகியோரின் ஆவிகளால் நடத்தப்பட்டது என்று உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது.
பங்களா வாசலில் கொலையான இருவரும் தொழிலதிபர் பாஸ்கர் சீனிவாசனிடம் வேலை பார்ப்பவர்களாக…
Read More
ஹீரோ திரைப்பட விமர்சனம்
திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாகசங்களைச் செய்வதுபோல் பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அவர்களைப் போல் சாகசம் செய்ய ஆசை பிறப்பது இயல்பு.
அப்படி சிறிய வயதில் சூப்பர் ஹீரோ ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோல்வியடைய வளர்ந்ததும் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் அப்படியெல்லாம் ஆக முடியாது என்று கண்டுகொள்கிறார். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் எந்தக் குழந்தையையும் அவர்கள் கனவுப்படி வளரவிட்டால் ஒவ்வொரு குழந்தையும் சூப்பர் ஹீரோ ஆக முடியும் என்று கண்டுகொள்வதுதான் படத்தின் கதைக் கரு.
அதிலும்…
Read More
தம்பி திரைப்பட விமர்சனம்
பாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார்.
அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது.
கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும் சத்யராஜ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களை இடம்பெயர வைக்கும் ஒரு தொழிலதிபரின் முயற்சிக்கு தடையாக இருக்கி றார். மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அவரை நடிகர் பாலா வில்லன் போல்…
Read More
சாம்பியன் திரைப்பட விமர்சனம்
வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்து விளையாடுவதும், வன்முறைக் களத்தில் ஈடுபடுவதும்தான் என்ற இலக்கணம்தான் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படுகிறது.
இதிலும் அதேதான் என்றாலும் இளைஞர்களின் கால்பந்தாட்டக் கனவையும், வன்முறைக் களத்தையும் உள்ளது உள்ளபடி நடப்பது நடந்தபடி காட்டியிருப்பதுடன் இன்றைய தலைமுறை அந்த அடையாளங்களிலிருந்து மீண்டு சாதிக்க விரும்புவதைக் காட்டியிருக்கிறார் தமிழில் அதிக பட்ச விளையாட்டுப் படங்கள் எடுத்த இயக்குநர் சுசீந்திரன்..
இதில் ‘சாம்பியன்’ என்ற தலைப்புக்கு அவர் சொல்ல வரும் பொருளே வேறு. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அடுத்து…
Read Moreகாளிதாஸ் திரைப்பட விமர்சனம்
வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள் என்றால் வீட்டிலிருக்கும் பெண்களும் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி யாரும் யூகித்திராத ஒரு முக்கியமான ஆபத்தைச் சொல்லி நம்மை சீட்டின் நுனியில் கட்டிப் போடுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சுற்றி நடக்கும் கதை. நான்கு பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்க, அதைத் துப்பறியும் காவல் ஆய்வாளரான பரத்தும், அவரது மேலதிகாரியான சுரேஷ் மேனனும் எதிர்கொள்ளும் மர்மங்களும், ஆச்சரியங்களும்தான் கதை.
தலைப்பின் நாயகனாக…
Read More
‘கேப்மாரி’ திரை விமர்சனக் கண்ணோட்டம்
தமிழ் ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… முதுபெரும் இயக்குநர் எஸ்ஏசி இயக்கத்தில் இன்று வெளியாகும் ‘கேப்மாரி’ படத்தை எப்படியாவது பெரு வெற்றிபெறச் செய்ய மன்றாடி வேண்டுகிறோம்…
எப்படிப்பட்ட இயக்குநர் எஸ் ஏ சி..? ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் சதாப்தி எக்ஸ்பிரஸ் போலக் கடந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியவர். தொடர்ந்து சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு ‘விளையாடி’ சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
சட்டத்துறைக்கு இவர் ஆற்றிய கலைப்பணிக்கு இவருக்கு ஒரு…
Read More