September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

மால் திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2023 0

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் இது.

நான்கு கிளைகளில் விரியும் தொடர்பில்லாத கதாபாத்திரங்களை ஒரு நேர்க்கோட்டில் சந்திக்க வைக்கும் ஒரு சம்பவத்தை பரபரப்பாக சொல்வதுதான் ‘மால்’ திரைப்படத்தின் களம்.

ஒருபக்கம் தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது.

இன்னொரு பக்கம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது.

மூன்றாவதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப்…

Read More

ஐமா திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2023 0

ஆதாம் (யூனஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள்.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான். அதற்காக இருவரையும் சித்ரவதை…

Read More

கடத்தல் திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2023 0

சினிமாவே தொழில் என்று ஆகிப்போனவர்கள் எடுக்கும் சினிமா ஒரு வகை. நாமெல்லாம் சினிமாவுக்குள் வந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறவர்கள் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தங்கள் ஆசைக்காக ஒரு படம் எடுத்து விடுவது இன்னொரு வகை. இது இரண்டாவது வகையில் அமையும் படம்.

இந்த இரண்டாவது வகைப் படம் எடுப்பதுதான் ஆனாலும் கடினமான காரியம். ஹீரோவாக ஆசைப்படும் ஒருவரை வைத்துக்கொண்டு அவர் தாங்கக் கூடிய கதையைத் தயார் செய்து அதில் வழக்கமான சினிமா சென்டிமென்ட் மற்றும்…

Read More

டீமன் திரைப்பட விமர்சனம்

by by Sep 23, 2023 0

பேய் பிடித்து ஆட்டும் கோலிவுட்டில் அடுத்த பேய்ப் படமாக வந்திருக்கும் இதில் புது முகம் சச்சினைப் பிடித்து ஆட்டுகிறது ஒரு நகரத்துப் பேய்.

“ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஒரு வீடு, அந்த வீட்டில் ஒரு பேய்…” என்று ஆரம்பிக்காமல் “நகரத்தின் மையப் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட், அதில் ஒரு பேய்…” என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.

இயக்குனராகத் துடிக்கும் ஹீரோ சச்சின் அதற்காக ஒரு பேய்க் கதையைத் தயார் பண்ணி ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி படமும்…

Read More

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்

by by Sep 15, 2023 0

கொஞ்ச காலத்துக்கு முன்னால் சயின்ஸ் பிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைவுப் படங்கள் தமிழில் எடுத்தால் எடுபடாது – புரியாது என்றொரு கருத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து டைம் டிராவல், டைம் லூப், ஜாம்பி, மல்டி யுனிவர்ஸ் என்றெல்லாம் அறிவியல் புனைவுப் படங்கள் வெளிவந்து தமிழ் ரசிகர்களை இப்படிப் படங்களைப் பார்க்கத் தயார் படுத்தி விட்டது என்று சொல்லலாம்.

இந்த மார்க் ஆண்டனியும் சயின்ஸ் பிக்ஷன் வகையறா படம்தான். டைம் டிராவல் என்று இல்லாமல் ‘டைம் கால்’ என்று…

Read More

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன்.

அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன்.

குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை எழில் வாழ்ந்த தங்குமிடம். அங்கே பல பேர் வந்து தங்கிச் செல்லும் சூழலில் ஒரு பெண் மாயமாவது தெரிய வருகிறது. 

அதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரியான சத்தியராஜ். விசாரிக்கும் போது…

Read More

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல். 

திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து வறுமையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதும் போலீஸ் வேட்டையில் அந்த அப்பாவிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தக் கதையை கண்ணீரும், ரத்தமுமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்.

வட சென்னையில் குத்துச்சண்டை…

Read More

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

இந்த வாரத்துக்காக ஆவி வந்த படம் இது. 

இன்னொரு ஆவிப் படமா என்று நாம் அலுத்துக் கொண்டு உட்காரும்போது ஆவி உலகம் என்பது புனைவு அல்ல – இயற்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் என்று ஒரு மகா விளக்கம் கொடுத்துப் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.

அடடே… பரவாயில்லையே, ஆவி கதையில் ஒரு அறிவியல் விளக்கம் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் ஓஜா போர்டைக் கையில் வைத்துக்கொண்டு கதாநாயகன் ஜஸ்டின் விஜய் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து விடுகிறார்.

முன்னாள் கார்…

Read More

ஜவான் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2023 0

இந்திப் படங்களைப் பார்த்து கோலிவுட் வாயைப் பிளந்தது ஒரு காலம். இப்போது தொழில்நுட்ப ரீதியில் கோலிவுட் படங்கள் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்க… பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

அப்படி இதற்கு முன்னர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கிப் பெயர் வாங்கிய நிலையில், இயக்குனர் அட்லியின் திறமை கண்டு, தான் நடிக்கும் தன்னுடைய சொந்தப் படத்தை இயக்கச் சொல்லி ஷாருக்கான் அவரை அணுகியதில் இருந்து இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு தொடங்கியது.

பான் இந்தியப் படமாக…

Read More

நூடுல்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2023 0

உலகிலேயே மிகப்பெரிய வன்மமும், பழிவாங்கலும் ஒருவரது ஈகோவைச் சுட்டு விடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

மெல்லிய லைன்தான் இந்த படத்தின் கதைக்களம். அதுவும் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே முடிகிற கதை. பின் இரவில் தொடங்கி அடுத்த நாள் காலைக்குள் முடிவுறும் இந்தக் கதை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே  காம்பவுண்ட் தாண்டி பக்கத்து தெருக் கடை வரை போகிறது.

நடுத்தர வர்க்கக் குடியிருப்பின் ஒரு பகுதி. வார இறுதி நாட்களில் ஒரு காம்பவுண்டுக்குள்…

Read More