October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

கேம் ஆஃப் லோன்ஸ் (Game of Loans) திரைப்பட விமர்சனம்

by by Oct 14, 2025 0

ஒரே ஒரு வீடு, நான்கே பாத்திரங்கள் – இதை வைத்து சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் நீட்டான ஒருபடத்தைக் கொடுக்க முடியுமா?

‘முடியும் ‘ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. அப்படி என்ன கதை என்கிறீர்களா?

இன்றைக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை எல்லாத் தேவைகளுக்கும் லோன் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. 

ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதற்காகப் பல இடங்களில் கடன் பெற்று அதைத்…

Read More

ராஜா வீட்டு கன்னு குட்டி திரைப்பட விமர்சனம்

by by Oct 11, 2025 0

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அப்படி நாயகனுக்கு முத்தத்துடன் நேர்ந்த முதல் காதல் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை. 

குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று. 

அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் விட, கவலையில்…

Read More

வில் திரைப்பட விமர்சனம்

by by Oct 11, 2025 0

ஏற்கனவே வில்லு என்ற படம் வந்தது… இது என்ன வில் என்று யோசிக்காதீர்கள். இது ஆங்கில ‘ வில்’ – தமிழில் உயில் .

அப்படி ஒரு உயில் பற்றிய வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி ஒரு பெரிய மனிதர் தன் சொத்துகளை தான் வாரிசுகள் இருவர் பெயரில் எழுதி வைப்பதுடன் வெளியூரில் உள்ள வீட்டை யாரோ ஒரு பெண்ணின் பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார்.

யாரோ ஒரு பெண்ணிடம் தங்கள் சொத்து…

Read More

மருதம் திரைப்பட விமர்சனம்

by by Oct 10, 2025 0

வாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..?

அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன். 

நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க ஒரு விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நடை உடை உடல் மொழியிலிருந்து ஒரு குடியானவனை நம்…

Read More

வேடுவன் (Zee5 ஒரிஜினல்) வெப் சீரிஸ் விமர்சனம்

by by Oct 8, 2025 0

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான்.

அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் அடுத்த…

Read More

இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்

by by Oct 8, 2025 0

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித்.

அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார். 

இந்நிலையில் நகரையே கலக்கும்…

Read More

மரியா திரைப்பட விமர்சனம்

by by Oct 3, 2025 0

எல்லா மதங்களிலும் கடவுள் வழிபாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக இருக்கிறது. அதில் கிறிஸ்தவ மதத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் வழிபாடு என்கிற ஒன்று இருப்பதாக இந்தப் பட இயக்குனர் ஹரி கே.சுதன் சொல்லி இருக்கிறார். 

படத்தின் கதை இதுதான்..!

விடுமுறைக்காக கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணான சாய்ஸ்ரீ பிரபாகரன், தனது சகோதரி முறை கொண்ட சிது குமரேசன் தங்கியிருக்கும் வீட்டுக்கு வருகிறார்.

அங்கே சிதுவோ விக்னேஷ் ரவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்வின் உறவில் வாழ்ந்து வருகிறார். அதேபோன்று…

Read More

இட்லி கடை திரைப்பட விமர்சனம் (Rating 4/5)

by by Oct 1, 2025 0

மனிதன் பொருள் தேடி உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடாதென்று உணர்த்தும் கதை.

இந்த வலிய கருத்தை எளிய முறையில் இட்லிப் பானையில் ஊற்றி அவித்துத் தந்திருக்கிறார் தனுஷ்.

உணவுப் படைப்பது வியாபாரம் அல்ல, ருசியுடன் உயிர் வளர்க்கும் சேவை என்று நினைக்கும் இட்லி கடைக்காரர் ராஜ்கிரனின் மகனாக பிறந்த தனுஷ், அதே தொழிலை விரிவாக செய்ய எண்ணி அப்பாவுடன் மாறுபட்டு வெளிநாட்டுக்கு சென்று தொழில் அளவில் உயர்கிறார். 

அதனால் கோடீஸ்வர முதலாளியின் மகளை…

Read More

பல்டி திரைப்பட விமர்சனம்

by by Sep 28, 2025 0

ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை.

அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது.

கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை.

ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக அவன் பின்னால்…

Read More

குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2025 0

ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே  முனைப்புடன் வளர்க்கிறார்.

வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார்.

அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

ஓங்குதாங்கான உடல்…

Read More