
தேர்தலில் அடையப் போகும் தோல்வியை பாஜக உணர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை…
Read More
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்கள் அறிவு, சக்தி, கர்மா..!
புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.
பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார்.
ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் கட்டி…
Read More
25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்வதில் பாஜக கவனம் செலுத்துகிறது – மோடி
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில பாஜக தொண்டர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதிலிருந்து…
“கர்நாடகாவுக்கு ஓரிரு நாட்களில் வந்து அம்மாநில மக்களின் ஆசீர்வாதத்தை பெறுவேன். தேர்தல் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள் அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தை பெற்றதாக தெரிவித்தனர். இது பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
பாஜக மீது கர்நாடக மக்கள் அபார நம்பிக்கை…
Read More
பாஜக அரசின் 40 சதவீத கமிஷன் பற்றிய கடிதத்துக்கு பதில் இல்லை – ராகுல் காந்தி தாக்கு
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வந்தார்.
விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் வரவேற்றனர்.
அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதில் இருந்து…
“அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு உள்ளது என பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதற்காக என்னை மக்களவை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர்.
பா.ஜ.க.வின்…
Read More
பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் – பிரதமர் மோடி
அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2023-24 மத்திய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க, அவர்களுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள்…
Read More
குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும். வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 37 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால்…
Read More
குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிச 8 ஆம் தேதி வெளியாகும்
182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.
19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு…
Read More
குஜராத் சட்டமன்றத் தேர்தல்- மும்முனைப் போட்டியில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு
182 இடங்களை கொண்டுள்ள குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
கடந்த 25 ஆண்டுகளாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. முயற்சி செய்ய, இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவற்றுடன் டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்தததில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
அங்கு முதல்கட்டமாக தெற்கு குஜராத்,…
Read More
பிரதமர் வழங்கிய பணி நியமனங்கள் தேர்தல் ஸ்டண்ட் – மல்லிகார்ஜுன கார்கே
மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததை அவர்…
Read More
அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. .
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின.
இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன்…
Read More