March 12, 2025
  • March 12, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்
February 16, 2025

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்

By 0 43 Views

மார்வெல் ஸ்டுடியோஸ்- இல் இருந்து வந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா தொடரின் நான்காவது படம் இது.

ஒரு காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த போது சூப்பர் ஹீரோக்களைத் துரத்திய ராஸ் இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கிறார். முன்பு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை என்று நினைத்தவருக்கு இப்போது அதன் தேவை புரிகிறது. 

அதனால் இதில் கேப்டன் அமெரிக்காவை அழைத்து புதிய அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கச் சொல்லி கேட்டுக்கொள்கிறார்.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் திடீரென தோன்றிய செலஸ்டியல் தீவில் இருக்கும் புதிய சூப்பர் மெட்டலான ‘அடாமண்டியத்’தைப் பெறுவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஃபிரான்ஸ், இந்தியா நாடுகளுக்கிடையே போட்டி நிலவ, இந்த நேரம் பார்த்து வினோத ஒலிகளை உருவாக்கி அதைக் கேட்பவர்களை தன் வயப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் வில்லன், தன் பழைய எதிரியான இன்றைய ஜனாதிபதி ராஸ் – ஐப் பழிவாங்குவதற்காக ஒரு திட்டம் தீடடுகிறான்.

இதன் மூலம் நல்ல புரிதலில் இருந்த ஜனாதிபதி ராஸ்-க்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் இடையே வேற்றுமை எழ… இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்குமான போர் தொடங்கும் சூழலில் கேப்டன் அமெரிக்காவின் பங்கு என்னவாக இருந்தது என்பதைச் சொல்லும் கதை இது. 

புதிய கேப்டன் அமெரிக்கா சாம் வில்சனாக சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டனி மிக்கி நடித்திருக்கிறார். தொடக்க காட்சியிலும் சிவப்பு ஹல்க்கை அடக்க முயலும் இறுதிக் காட்சியிலும் அவரது ஆற்றல் ரசிக்க வைக்கிறது.

புதிய அமெரிக்க ஜனாதிபதி ராஸ் ஆக ஹாரிசன் போர்ட் நடித்திருக்கிறார். தனக்கு என்ன நேர்கிறது என்று தெரியாத நிலையில் அந்த உணர்வை அற்புதமாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். 

அமெரிக்க ஜனாதிபதியே ரெட் ஹல்க் ஆக மாறும் காட்சி பிரமிக்கவும் அதிசயிக்கவும் வைக்கிறது.

இதைப் போன்ற படைப்பு சுதந்திரமெல்லாம் அமெரிக்காவில் சாத்தியம். இந்தியாவில் சாத்தியமா என்று நினைக்கவே முடியவில்லை.

ஜூலியஸ் ஓனா இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை கிராமர் மோர்கன்தவ் ஏற்க,  இசையை லாரா கார்ன்மென் ஏற்று இருக்கிறார். பின்னணி இசை பிரமாதம்.

கேப்டன் அமெரிக்காவுக்கான முழுமையான படமாக இருந்தும் அவரது சாகசம் படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை. 

இருந்தாலும் புதிய அவெஞ்சர்ஸ் டீம் உருவாவதற்கான சாத்தியத்தை முன்னெடுப்பதில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. 

என்னதான் அமெரிக்காவின் பெருமை சொல்லும் படமாக இருந்தாலும் ஹாலிவுட் படங்களின் இந்திய மார்க்கெட் எத்தனை பெரிது என்பது திரைக்கதைக்குள் இந்தியாவைக் கொண்டு வருவதில் இருந்தே புரிகிறது.

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட்  – புதிய அவெஞ்சர்ஸ்-களுக்கான அடித்தளம்..!

– வேணுஜி