July 18, 2025
  • July 18, 2025
Breaking News
  • Home
  • பல்சுவை
  • தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!
July 18, 2025

தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!

By 0 14 Views

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அதன் பிஸ்கட்களை அழகாக பல்வேறு வடிவங்களில் உடைத்து தமிழ்நாடு தினத்தை கொண்டாடவுள்ளது.!

சேலம்: தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடும் விதமாக மக்களின் அபிமான பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இன்றளவில் பிராந்திய அளவில் மக்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்ட பிரிட்டானியாவின் முன்முயற்சியாக இது இருக்கும்.

டேலன்ட்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிரச்சாரம் பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் இருந்துவரும் ஒரு தனித்துவமான கலாச்சார பழக்கத்தை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தும் – அதாவது மில்க் பிக்கிஸ் கிளாஸிக் பிஸ்கட்டின் பூ போட்ட பார்டர் டிசைனை முதலில் கடித்துவிட்டு, பின்பு லோகோவுடன் பிஸ்கட்டை சாப்பிடும் பழக்கம், தமிழ்நாட்டிற்கே உரியது. இந்த அன்றாட பழக்கத்தை மையமாகக் கொண்டு, பிரிட்டானியா அதன் பிஸ்கட்டை தாமாகவே கடிக்கும் விதமாக இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சார சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் பல பிரிட்டானியா பிஸ்கட்டை கடித்தே அழகாக வடிவமைக்கப்படவுள்ளன; அவை அச்சிடப்பட்ட விளம்பரங்கள், அட்டகாசமான கட்டவுட்கள் மற்றும் ஒரு விளம்பரப் படமாகவும் உயிரோட்டத்துடன் வெளியிடப்படவுள்ளன.

சூப்பர்ஸ்டாரின் கண்ணாடி முதல் மதுரை மல்லி வரை, 80 விளம்பரப் பதாகைகள் தமிழகம் முழுவதும் ‘A Bite of TN’ என்ற பெயரில் 19 மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த திசைக்காட்டும் விளம்பர பலகைகள், பின்கோடு அடிப்படையில், 80 தனித்துவமான இடங்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக பொருத்தப்படவுள்ளன. புகழ்பெற்ற இடங்கள், பாப்-கலாச்சார கதைகள், துணை கலாச்சாரங்கள், உணவகங்கள் மற்றும் பூங்காக்கள் என கலாச்சார ரீதியான ஒரு தொகுப்பு இவை உள்ளன. இந்த பிரச்சாரம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரபலமான விஷயங்களுக்கும் ஒரு பயண வழிகாட்டியாகவும் செயல்படும். இதன் அச்சு வடிவ பிரச்சாரமானது, குறிப்பிட்ட மாவட்டத்திற்கே உரிய 13 பிரத்தியேக படைப்புகளையும் கொண்டுள்ளன – அவை நகரின் பெரிதாக தெரியாத சிறப்பான விஷயங்களை அறிமுகம் செய்வதாக இருக்கும்.

ஹைப்பர்லோகல் எனப்படும் உள்ளார்ந்த பிராந்திய பிரச்சாரங்களை பின்கோடு அடிப்படியிலான அணுகுமுறையில் மேற்கொள்வது பிரிட்டானியாவுக்கு புதியதல்ல. மாநிலத்தின் கலாச்சாரத்தினை இப்படி ஆழமாக இறங்கி வெளிப்படுத்துவதன் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டானியா நிறுவனத்தின், பொது மேலாளர், சித்தார்த் குப்தா, அவர்கள் கூறுகையில் “பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பல தலைமுறைகளாக தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50% குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுகையில் மில்க் பிக்கிஸ் சாப்பிடுகின்றனர். தமிழ்நாடு எங்கள் மீது காட்டிவரும் அன்பிற்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற எங்களது இந்த பிரச்சாரம் தமிழர்களுடனான அந்த பிணைப்பிற்கு நாங்கள் வெளிக்காட்டும் ஒரு நன்றியாகும். ஒரு பிஸ்கட்டின் கண்ணோட்டத்தில், அது நேசித்து வாழ்ந்த தமிழ்நாட்டின் சிறப்பையும், கலாச்சார பழக்கங்களையும் கொண்டாடும் விதமாக இந்த படைப்பினை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தமிழக மக்களுடன் இணைந்திருக்கவும், மில்க் பிக்கிஸை இந்த நிலைக்கு உயர்த்தியவர்களுடன் எங்கள் உறவை மேலும் ஆழப்படுத்தவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார்.

டேலன்ட்டட் நிறுவனத்தின், பிராண்டு ஸ்டிராட்டஜி, ரியா ஷர்மா, மற்றும் கிரியேட்டிவ், ஆலியா ஷேக், ஆகியோர் பின்வருமாறு கூறினர்: “’எ பைட் ஆஃப் TN’ என்கிற பிரச்சாரமானது இந்த மாநிலத்துடன் சேர்ந்து வளர்ந்த ஒரு பிராண்டுக்கு மட்டுமே பொருந்தும். எங்கள் மீடியா பார்ட்னர்களுடன் இணைந்து நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான இடங்களை அடையாளம் கண்டுபிடித்தோம், எங்கள் விளம்பர பதாகைகளை அவற்றிற்கு அருகாமையில் வைப்பதற்காக கூகிள் மேப்பினை பயன்படுத்தினோம். இதற்காக நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது மற்றும் அதற்கு அருகில் உள்ள பிரபலமான இடத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மில்க் பிக்கிஸ் மற்றும் தமிழ்நாட்டுடனான கூட்டணியில் நாங்கள் உருவாக்கிய படைப்புகள் ஒவ்வொன்றின் மூலமாகவும் தமிழகத்தின் மீதான எங்கள் அன்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையான படைப்புகளை கடைக்கோடி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்வதை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.”

விளம்பரப் படத்தை இங்கே காணுங்கள்: 

ரூட்டட் பிலிம்ஸின், இயக்குனர், ரோனக் சுக் அவர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “ஒரு இடத்தை அதன் காட்சிகள், சப்தங்கள், வாசனைகள், அதன் மக்கள் மற்றும் அதன் உயிரோட்டம் ஆகியவையே உண்மையாக உருவாக்குகின்றன. அதனால்தான் நான் பிறந்து வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டை கொண்டாடும் விதமாக இந்த படைப்பை உருவாக்கியுள்ளோம். பல்வேறு வடிவங்களில் கடித்து வடிவமைக்கப்பட்ட மில்க் பிக்கிஸிற்கு ஸ்டாப் மோஷன் அனிமேஷன் மூலம் உயிரூட்டி, துள்ளலான நாட்டுப்புற பாடல் + கோலிவுட் இசை + கானா ஆகியவற்றின் ஸ்டைலுடன் கூடிய ஒரு பாடலுடன் அசத்தலாக உருவாக்கினோம். எங்களுக்கு பிடித்த பகுதி என்னவென்று கேட்டால்… பாடல் வரிகளில் ‘தமிழ்நாடு டே’ என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு ‘டேய்’ என செல்லமாக நண்பனை அழைப்பது போன்ற வரிகளும் இருக்கும், இயல்பான இந்த அன்றாட பேச்சுநடை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தமிழ்நாட்டுடன் பல தசாப்தங்களாக ஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது. உள்ளூர் அளவிலான விளம்பரப் படைப்பினை வெளிப்படுத்தும் விதமாக ஏற்கனவே ‘அனைவருக்கும்’, ‘அடேங்கப்பா’ மற்றும் ‘ஃப்ளாஷ்பேக் பேக்’ போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தமிழகத்தின் வளமான மொழி, பன்முகத்தன்மை மற்றும் அந்தந்த பகுதிகளின் பெருமையைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தின் மீது பிரிட்டானியா பிராண்டு கொண்டுள்ள நீண்டகால அன்பு மற்றும் இணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.