செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு.
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு.
மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என உத்தரவு – மத்திய உள்துறை அமைச்சகம்
நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கூடாது – மத்திய உள்துறை அமைச்சகம்.
நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்க மத்திய அரசு அனுமதி.
செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி.
9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம் ஆனால் கட்டாயமல்ல – மத்திய அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக
வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை ஆக.31இல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – மகன் எஸ்பிபி.சரண்.
நடிகர் விஜய் ரசிகர் சின்னப்பிள்ளைகள் போல் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர் – அமைச்சர் செல்லூர் ராஜூ.
வைகை அணையில் இருந்து கம்பம் பெரியாறு பிரதானக் கால்வாய் பகுதியில் ஆக.31 முதல் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்ததாக பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31இல் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம்.
அண்ணாமலை ஐபிஎஸ் அரசியலில் நீடிப்பாரா என்பது சந்தேகமே – திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு).
எத்தனை அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது – முன்னாள் ஐஏஎஸ் தேவசகாயம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – பிசிசிஐ
வெளிநாட்டுப் பயணிகள் மலேசியாவுக்குச் செல்ல டிசம்பர் வரை தடை தொடர்கிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.