October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியது
January 22, 2021

பா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியது

By 0 731 Views

தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித் . இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டது தெரிந்த விஷயம்.

தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் இரஞ்சித் அதற்காகவே நீலம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இந்தப் படங்களின் மூலம் மாரி செல்வராஜ் மற்றும் அதியன் ஆதிரை என்று இரு திறமை மிக்க இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்கள்.

Bommai Nayagi First look

Bommai Nayagi First look

இப்போது அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்கும் “பொம்மை நாயகி” என்ற படத்தை நீலம் புரடக்ஷன்சுக்காக தயாரிக்கிறார் ரஞ்சித்.

இதில் காமெடி நாயகன் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

இன்று முதல் இதன் சூட்டிங் கடலூரில் தொடங்கி தொடர்ந்து நடக்கிறது. இந்த பட பர்ஸ்ட் லுக் இன்று  வெளியிடப் பட்டிருக்கிறது.