January 26, 2022
  • January 26, 2022
Breaking News
  • Home
  • Director Pa.Ranjith

Tag Archives

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதையா – பாரதிராஜா பெருமிதம்

by on December 23, 2021 0

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். […]

Read More

நான் தயாரிக்கும் படம் தவறான அரசியல் பேசக் கூடாது – பா.இரஞ்சித்

by on December 20, 2021 0

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பா .ரஞ்சித் […]

Read More

காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்

by on December 17, 2021 0

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து தரமான படங்களை தந்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் […]

Read More

சார்பட்டா திமுக வின் பிரசாரப் படம் – ஜெயக்குமார் தாக்கு

by on July 24, 2021 0

கடந்த வியாழனன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியான பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதை குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் அறிக்கை முழு விபரம். “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய ’சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே […]

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியது

by on January 22, 2021 0

தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித் . இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டது தெரிந்த விஷயம். தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் இரஞ்சித் அதற்காகவே நீலம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களின் மூலம் மாரி செல்வராஜ் மற்றும் அதியன் ஆதிரை என்று […]

Read More

பா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்

by on December 2, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், […]

Read More

இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

by on March 19, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார்.  ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித். இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!

Read More

அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

by on March 2, 2020 0

கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று. சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து அவரை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக உடலை இரும்பு போன்று ஆக்கிய காட்சிகள் சமூக அவலை தளங்களில் வைரல் ஆயின. இவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஆர்யாவை […]

Read More