April 10, 2026
  • April 10, 2026

தீபாவளிக்கு அமிதாப் ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்-டிரைலர் இணைப்பு

by on September 30, 2018 0

‘யாஷ் ராஜ்’ என்றாலே பிரமாண்டம். இப்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன், அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ . இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘கத்ரீனா கைப்’ மற்றும் ‘பாத்திமா சனா சேக்’ ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி உள்ளார். நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் பாலிவுட்டின் மிகப்பெரிய […]

Read More

1000 வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன் – ஜாமீனில் வெளிவந்த கருணாஸ்

by on September 29, 2018 0

நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர், துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்ய மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் […]

Read More

சங்கத்துடன் மல்லுக்கட்டி வென்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள்

by on September 29, 2018 0

‘கபாலி’. ’24’, ‘காஷ்மோரா’, ‘மெட்ராஸ்’, ‘சண்டக்கோழி-2’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் என அழைக்கப்படும் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்..? தங்களிடம் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு தனி […]

Read More

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More

நோட்டா வுக்காக மரண வெயிட்டிங் – விஜய் தேவரகொண்டா

by on September 28, 2018 0

ஆந்திரப் படவுலகமும், ஆந்திர திரைப்பட ரசிகர்களும் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா போகும்வழியில் மண்ணெடுத்து பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். அப்படிப்பட்ட அவரை நேருக்கு நேர் அருகாமையில் நேற்று சென்னையில் நடந்த ‘நோட்டா’ பத்திரிகையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ‘நோட்டா.’ விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக […]

Read More

விஷால் தனுஷுடன் மோதத் தயாராகும் விவேக்

by on September 27, 2018 0

‘வையம் மீடியாஸ்’ சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார்.   அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.    முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் […]

Read More
CLOSE
CLOSE