January 14, 2025
  • January 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீபாவளிக்கு அமிதாப் ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்-டிரைலர் இணைப்பு
September 30, 2018

தீபாவளிக்கு அமிதாப் ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்-டிரைலர் இணைப்பு

By 0 1004 Views

‘யாஷ் ராஜ்’ என்றாலே பிரமாண்டம். இப்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன், அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .

இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘கத்ரீனா கைப்’ மற்றும் ‘பாத்திமா சனா சேக்’ ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி உள்ளார்.

நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன் முதலாக இணைந்து நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர்கள் டப் செய்யவில்லை. பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்ளனர்.

தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இதன் டிரைலர்களில் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த டிரைலர் கீழே…