August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து
March 17, 2019

கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து

By 0 929 Views
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.
 
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.
 
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், 15.03.2019 அன்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ கபடி வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார். 
 
இமயம் கொடுத்த விருந்து இனித்ததா மக்களே..?