ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” .
டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது.
உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
நிகழ்வில்…
பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதிலிருந்து –
“பேச்சிலர் படத்தில் வேலை செய்தது மிக அழகான அனுபவம். பாடல்கள் எல்லாம் அழகாக வந்திருக்கிறது. சித்துகுமார் இசையில் இயக்குநர் என் கூட இருந்து படத்திற்கு தேவையானதை கேட்டு வாங்கினார்..!”
இயக்குநர் சதீஷ் செல்வகுமார்…
“3 வருடத்துக்கு முன் டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் – செய்யலாம் என்றார்.
நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம். தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம், தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி.
படம் இத்தனை இயல்பாக இருக்க ஜீவி சார்தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள்..!”
தயாரிப்பாளர் G.டில்லிபாபு…
“படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான். 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு.
போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது. அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். படத்தை பார்த்த அனைவருமே படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். எனக்கு ராட்சசனுக்கு பிறகு பெரிய படமாக இது இருக்கும். ஜீவி தந்த உழைப்பு பிரமிப்பானது இரவு பகலாக உழைத்திருக்கிறார்.
அவர் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். திவ்யபாரதி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஜீவிக்கும் அவருக்கும் நடிப்பில் போட்டியிருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம். நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்கள் தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன். சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது..!”
நடிகை திவ்யபாரதி…
2 வருடமாக இந்த தருணத்திற்காகத்தான் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம் ஆனால் என்னை நம்பி நடிக்க வைத்ததற்கு நன்றி. முதலில் ஷீட் செய்ய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது.
க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ் தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார். ஜீவி சார் மிக இயல்பாக இருந்து, எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தார்..!”
ஜி.வி. பிரகாஷ் குமார்…
“இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன்.
டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்..!”