June 18, 2026
  • June 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்
July 5, 2020

பெண்களே… ஆடிஷனுக்கு அழைத்து அங்க இங்க கை வச்சா அடிங்க இந்த நம்பருக்கு – இது கேரளா ஸ்டைல்

By 0 740 Views

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பல டுபாக்கூர்கள் ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன.

இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர் வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அன்னா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது தவறாக நடந்து கொள்ள முயற்சித்தால், உடனே 984 634 2226 மற்றும் 964 534 2226 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 👇