July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

by on April 10, 2020 0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களும் […]

Read More

நட்சத்திர ஓட்டலை மருத்துவப் பணியாளர்கள் தங்க இலவசமாகக் கொடுத்த பாலிவுட் நடிகர்

by on April 10, 2020 0

அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சுத். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல விருதுகளை பெற்றவர் இவர். சமீபத்தில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து சோனு சுத் தனது ஸ்டார் ஹோட்டலை கொரோனாவுக்காக திறந்து விட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக உழைத்து வருகின்றார். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை […]

Read More

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா சீயான் விக்ரம்

by on April 10, 2020 0

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியானது. இதற்கு பல மணி நேரம் கழித்து விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவி த்திருக்கிறது.       டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கி 30 வருட போராட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தவர் விக்ரம். கமலுக்கு அடுதது தன் உடலை கதா பாத்திரத்தில் பொறுத்த ரிஸ்க் எடுப்பதில் வல்லவரான இவர் தமிழில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர். இவர் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் […]

Read More

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

by on April 10, 2020 0

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை […]

Read More

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்

by on April 9, 2020 0

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை […]

Read More

ரஜினிக்கு மாற்றாக சந்திரமுகி 2 வில் ராகவா லாரன்ஸ்

by on April 9, 2020 0

பி.வாசு இயக்கத்தில ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது. இடையே, ‘தர்பார்’ படத்துக்காக அளித்த பேட்டியில் ரஜினியிடம் ‘சந்திரமுகி 2’ கதைக்கான ஒன்லைன் குறித்துப் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். அப்போது அதற்கு பதிலளித்த […]

Read More

இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்த தினம்

by on April 9, 2020 0

இந்திய இலக்கியங்களில் ‘ வால்கா முதல் கங்கை வரை ‘ நூலுக்கு தனியிடம் உண்டு. அதனைப் படைத்த மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Mahapandit Rahul Sankrityayan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9).  ‘ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ‘என்று அறியப்படுபவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் இதே ஏப்ரல் 9 ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார் (1893). இவரது […]

Read More

கட்டத்துர ரியாஸ்கானை மிரட்டியது யார் போலீஸ் விசாரணை

by on April 9, 2020 0

வின்னர் படத்தில் கைப்புள்ள வடிவேலுவை, கட்டத் துர ரியாஸ்கான் மிரட்டும் காமெடி உலகப் புகழ் வாய்ந்தது. இப்போது கட்டத்துர ரியாஸ்கானையே ஒரு கும்பல் மிரட்டி உள்ளது. பனையூா் ஆதித்யாராம் நகா் 8-ஆவது தெருவில் குடும்பத்துடன் ரியாஸ்கான் வசித்து வருகிறார். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் இரு க்கையில் அவரது வீட்டின் அருகே சுமாா் 10 பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். இதைப்பாா்த்த ரியாஸ்கான், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேச […]

Read More

பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா – செங்கல்பட்டில் 1000 குடும்பத்துக்கு கொரானா நிவாரணம்

by on April 8, 2020 0

PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது . இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு , […]

Read More

ஜூம் கால் மூலம் நிர்வாகிகள் ரசிகர்களிடம் பேசிய கமல்

by on April 8, 2020 0

இரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார். அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல். போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ […]

Read More