June 6, 2023
  • June 6, 2023
Breaking News
June 1, 2020

மனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்

By 0 557 Views

நடிகர் மனோபாலா தன் யூ டியூப் சேனலுக்காக காமெடி நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார்.

அதில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கமெண்ட்டுகளை இடைச்செருகல் ஆகப் போட்டிருந்தார்.

அதே சமயம் ”வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்” எனச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ”அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’’ என்று குறிப்பிட்டதுடன், வடிவேலு குறித்து அச்சிலேற்ற முடியாத சில வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தார்.

நாலு பகுதிகளாக வெளிவந்த இந்த பேட்டியின் லிங்க்கை மனோபாலா, ‘SIAA லைஃப்’ என்ற நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குழுவிலும் ஷேர் செய்ய, பிரச்னை வெடித்தது.

”அவர் பாட்டுக்கு அமைதியா இருக்கார்… ஏன் அவரை இதுபோல அசிங்கப்படுத்தறீங்க’’ என குரூப்பில் சிலர் கமென்ட் போடத் தொடங்க, அதற்குள் மனோபாலா வீடியோவைப் பார்த்த  வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்திருக்கும் சிறப்பு அதிகாரி கீதா வடிவேலுவிடம் ஒரு புகாரைப் பதிவு செய்து விட்டார்.

அந்தப் புகாரில்… மனோபாலா, சிங்கமுத்து இருவர் மீதும் சங்க விதிப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

வடிவேலு புகார் அளித்த சில மணி நேரத்தில்,’குழுவில் அட்மின் தவிர எவரும் எந்தப் பதிவையும் போடக் கூடாது’ என்று குழு முடக்கப்பட்டு விட்டதாம்.

ஒரே துறையில் இருந்து கொண்டு எவ்வளவு விஷமம் மனோ பாலாவுக்கு..?

வடிவேலு கொடுத்த புகார் கீழே…

Vadivelu Manobala conflict