November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

by on October 27, 2022 0

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு […]

Read More

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கை 2022 – 2023 (H1)

by on October 27, 2022 0

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஏறத்தாழ 5 சேவையாற்றி வருகிறது.  2022 – 27.10.2022 […]

Read More

இயற்கையே ஒத்துழைத்த நித்தம் ஒரு வானம் பட சுவாரஸ்ய நிகழ்வுகள்

by on October 26, 2022 0

வயாகாம் 18 ஸ்டூடியோஸ் உடன் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெpயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ள இனிமையான காதல் படம் ‘நித்தம் ஒரு வானம்.’ “ஆனால், காதல் மட்டுமே படத்தில் பிரதானமாக இல்லை. அதையும் தாண்டி சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் இந்த படத்தை இன்னும் ரசிக்க வைக்கும்..!” என்கிறார் படத்தின் இயக்குனர் ரா.கார்த்திக். மேலும் அவர் படம் பற்றி பேசுகையில், “தமிழ் தெலுங்கு […]

Read More

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் ‘ தல ‘ தோனி..!

by on October 25, 2022 0

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் […]

Read More

பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

by on October 23, 2022 0

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் […]

Read More

பெங்களூருவில் வெளியிடப்பட்ட பிரமாண்ட பான் இந்திய KD-The Devil பட டைட்டில் டீஸர்

by on October 22, 2022 0

2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான  வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851 கோடிகளைத் தாண்டி அனைவரும் வியக்கும் வண்ணம், கன்னட திரையுலகம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையாக மாறி நிற்கிறது ! கன்னட திரையுலகில் KVN Productions, தொடர்ந்து […]

Read More

சர்தார் திரைப்பட விமர்சனம்

by on October 22, 2022 0

இந்தப் பூவுலகில் மூன்றாம் உலகப்போர் நேருமானால் அது குடி தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். இயற்கையாக கிடைக்கும் குடிநீரை உலக மக்கள் பயன்படுத்த விடாமல் அந்த பொறுப்பை தனியார் கையில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்ய நேர்ந்தால் அதுவே மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள். அதற்கு எடுத்துக்காட்டாக உலகின் பல பல பகுதிகளிலும் இப்படி தனியார் நிறுவனம் குடிநீர் விற்பனையை மேற்கொண்டு அதன் விளைவாக கடும் வறட்சியை சந்தித்து வருவது முன் வைக்கப்படுகிறது. இந்தியாவில்… […]

Read More

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்

by on October 20, 2022 0

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.    தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில்  ‘காலேஜ் டேஸ்’ & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் ‘A ஸ்டோரி’ ஆகிய  இரண்டு  வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய […]

Read More

தீபாவளி ரேஸ் – சர்தாருக்கு அதிக திரை அரங்குகள்

by on October 20, 2022 0

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.  கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்..  தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் […]

Read More

தீபாவளிக்கு வெளியாகும் என் முதல் படம் ப்ரின்ஸ் -சிவகார்த்திகேயன்

by on October 19, 2022 0

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யூடியூபரும் நடிகருமான ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல் பேசியதாவது… “இந்தப் படத்தில் நடிக்க […]

Read More