September 24, 2023
  • September 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கர்நாடகாவில் தேவர் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழு கோரிக்கை
July 23, 2023

கர்நாடகாவில் தேவர் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழு கோரிக்கை

By 0 78 Views

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது.

இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி.

இந்நிலையில் மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ.எம்.பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார். நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார். கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப் பட்டது.