October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினியை வளைக்கவும் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறது மத்திய அரசு
February 10, 2020

ரஜினியை வளைக்கவும் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறது மத்திய அரசு

By 0 786 Views

எப்போதுமே மனதுக்குப் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் நேர்மையாகவும் பேசக் கூடியவர் இயக்குநர் அமீர்.

நேற்று ஒரு தனியார் விருது விழாவுக்கு வந்திருந்த அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு பற்றியும், விஜய்யை வருமான வரித்துறையினர் பாதி படப்பிடிப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது பற்றியும் கேள்விகள் கேட்கப் பட்டன.

அந்தக் கேள்விகளுக்கு நிதானமாக ஆனால் நேர்மையாக பதிலளித்தார் அமீர். அதில் வருமான வரி சோதனை என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும், ஒருவருக்கு நெருக்கடி கொடுக்கும் முகமாகவே கடந்த ஆண்டுகளில் நடத்தப் படுவதாக கூறிய அவர் இப்போது விஜய்க்கும் அதே நெருக்கடி கொடுக்கப்படுவதாக சந்தேகிப்பதாகவும், அதேநேரம் ரஜினியை வளைக்கவும் முயல்கிறது மத்திய அரசு என்றார்.

அதன் காணொலிக் காட்சி கீழே…