March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் நேரில் ஆஜராக ஐடி துறை சம்மன் – ஆஜராகாத விஜய் தரப்பில் கோரிக்கை
February 10, 2020

விஜய் நேரில் ஆஜராக ஐடி துறை சம்மன் – ஆஜராகாத விஜய் தரப்பில் கோரிக்கை

By 0 675 Views
அதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம்.
 
முன்னதாக ரஜினி-க்கு ஐடி துறை சலுகைக் காட்டியதாக வந்த செய்திகளுக்கு மறு நாள் அதிமுக-வில் அங்கம் வகித்தபடி கோலிவுட்டை கோலோச்சிக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனின்  சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. அப்போது பிகில் பட வசூல் தொடர்பாக ஏகப்பட்ட துண்டு சீட்டு முதல் டாக்குமெண்ட் எல்லாம் சிக்கியதாம். 
 
இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
கூடவே, பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து நடிகர் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று அவரிடமும், அவர் மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடந்தது. தொடர்ந்து 31 மணி நேரம் நடந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து ஏதேதோ ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்களாம்..
 
இதுக்கிடையில் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவர் மறைத்து வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போனார்கள். கல்பாத்தி அகோரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு போனதாகவும் செய்திகள் வந்தன. 
 
இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்கும், வருமான வரித்துறைஅதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கும் நிலையில் விஜய் இன்று அங்கு ஆஜராகவில்லையாம்.
 
தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் மேலும் அவகாசம் வேண்டுமென்று விஜய் தரப்பில் கேட்டிருக்கிறார்களாம்.