September 15, 2025
  • September 15, 2025
Breaking News
February 21, 2021

அஜித்தின் பில்லா மீண்டும் ரிலீஸ் – வலிமை அப்டேட்ஸ் கேட்பதை தடுக்கும் முயற்சியா?

By 0 801 Views

அஜித் நடித்துவரும் ‘ வலிமை ‘ படம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருப்பதில் அதிருப்தியடைந்த ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்கள் இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல்வர் தொடங்கி பிரதமர் வரை கண்ணில்படும் எல்லோரிடமும் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அஜித்தும் தன் தரப்பு நியாயத்தை ரசிகர்களிடம் விளக்கி ஒரு அறிக்கையாக வெளியிட்டார்.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘ பில்லா ‘ படத்தை மீண்டும் வெளியிடுவது என்ற முடிவுக்கு அதன் தயாரிப்பு நிறுவனம் வந்திருக்கிறது.

அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா.

பிரபு ரகுமான் சந்தானம் ஜான் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்க பட்டது.
ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்திருந்த “பில்லா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால் பில்லா படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

இந்த முயற்சியும் ஒருவிதத்தில் ரசிகர்கள் வலிமை அப்டேட்ஸ் கேட்பதை தடுக்கும் என்று அஜித் தரப்பில் எதிர்பார்க்கிறார்களோ என்னவோ?