சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதும் இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருவதும் தெரிந்த விஷயம்தான்.
அவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் அவ்வப்போது எழுந்து அடங்கும்.
அந்த வகையில் லதா ரஜினி பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் நேற்று ஆஸ்ரம் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், கொரோனா காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
ஊதியம் குறித்து கேட்டால் தொடர்ந்து இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டிய பள்ளி ஊழியர்கள், தாங்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்தாவது தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தார்கள்.
தான் சம்பந்தப் படாமலேயே சூப்பர் ஸ்டாருக்கு எப்படி எல்லாம் நெருக்கடி வருகிறது பாருங்கள்..!