August 8, 2022
  • August 8, 2022
Breaking News
September 24, 2021

ரக்‌ஷன் சுனிதா ஜிபி முத்து இணையும் என்ன வாழ்க்கடா ஆல்பம்

By 0 141 Views

SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்‌ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். 

23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர்.

தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்‌ஷ்மி பேசியதாவது…

“SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக SAREGAMA Originals எனும் அமைப்பு மூலம், தற்போது புதிய இசை திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

முன்பு ஒரு நிகழச்சிக்காக ஏ ஆர் ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்து போயிருந்தோம், அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு, SAREGAMA Originals உடைய முதல் பாடலை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி…!”

நடிகை ஐஷ்வர்யாா- 

“SAREGAMA விஜயலக்‌ஷ்மி இந்தியாவில் முதல் பெண் கேமராமேனாக இருந்தவர். அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன்.

சுனிதா, ஸ்வஷ்திஸ்டா நன்றாக டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியும், ஆனால் பாட்டை பார்த்த பிறகு தான் ரக்‌ஷனுக்கு இந்த அளவு ஆடத்தெரியும் என்பது தெரிந்தது. எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள்..!”

பாடலாசிரியர் A.PA. ராஜா –

“குட்டிப்பட்டாசு பாடலுக்கு பிறகு, நான் செய்யும் துள்ளலான இரண்டாவது பாடல் இது. இப்பாடலில் பெண் பித்தனாக நாயகனை சித்தரிக்கவில்லை, ஒரு ஜாலியான பாடலாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம்..!”

பாடகர் பென்னி தயாள்்- 

“இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதுமே இண்டிபெண்டட் ஆல்பங்கள் பாடல்கள் பாட அதிக முக்கியத்துவம் அளிப்பேன். கணேசன் முதலான குழுவினர் என்னை இப்பாடலுக்கு அணுகியதற்கு நன்றி. GPமுத்து அண்ணா உங்கள் காமெடி வீடியோ நிறைய பார்ப்பேன். என்னை பார்த்தால், நான் அப்படிபட்ட வீடியோக்கள் பார்ப்பது போல் தெரியாது ஆனால் காமெடி வீடியோக்கள் எல்லாமே பார்ப்பேன்..!”

இசையமைப்பாளர் S.கணேசன் –

“எனக்கு வாய்ப்பு தந்த NOISE and GRAINS குழுவிற்கு நன்றி. டோங்கிலி என்னை தேர்ந்தெடுத்து, வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த ஆல்பம் பாடலை டால்பி டிஜிட்டலிலும் பண்ணியுள்ளோம் கேட்டுப்பாருங்கள்..!”

இயக்குநர் டாங்க்லி ஜம்போ –

“இளைஞர்கள் தினசரி வாழ்வில் சந்திப்பதை தான் பாடலாக செய்தோம், புதிதாக எதுவும் செய்யவில்லை. இந்த பாடலை குழுவாக இணைந்து செய்துள்ளோம்..!”

GP முத்து –

“இந்த பாடலில் டான்ஸ் ஆடியது சந்தோஷமாக இருக்கிறது. காட்டில் கிடந்து லெட்டர் படித்தவனை டான்ஸ் ஆட வைத்த SAREGAMA வுக்கு நன்றி. டிக்டாக் போனபோது நிறைய வருத்தப்பட்டேன். ஆனால் மக்கள் எனக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார்கள்..!”

நடிகை ஸ்வஷ்திஸ்டா –

“இந்த பாடல் முதலில் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. பாடலின் தாளம் இசை எல்லாமே பிடித்திருந்தது. ரக்‌ஷனை இந்த செட்டில் தான் முதன் முதலில் பார்த்தேன். செட்டையே கலகலப்பாக வைத்திருந்தார். சுனிதா ரக்‌ஷன் “குக் வித் கோமாளியில்” அனைவருக்கும் தெரிந்த ஜோடி, இப்பாடலிலும் கலக்கியுள்ளனர்..!”

“SAREGAMA தமிழில் அறிமுகமாகும் பாடலில் நான் பங்கேற்றது மகிழ்ச்சி. முக்கியமாக டாங்கிலிக்கு நன்றி. ரக்‌ஷனுக்கு நன்றி அவனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது..!”

நடிகர் ரக்‌ஷன் –

“SAREGAMA குழுவிற்கு முதலில் என் நன்றி. டோங்க்லி அண்ணாவுக்கு நன்றி. அவர் தான் என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்தார். இந்தப்பாடலில் வேலை செய்ததது, மிக சந்தோஷமான அனுபவமக இருந்தது. சுனிதா உடன் ஆட, நிறைய பயந்தேன் ஆறு நாள் நான் பயிற்சி எடுத்து ஆடியதை, ஒரே நாளில் அவர் ஆடிவிட்டார்..!”

செஃப் தாமு –

“ரக்‌ஷன் என் பிள்ளை மாதிரி, எனக்கு மிகவும் தெரிந்த குழுவினர் இணைந்து இப்பாடலில் பணியாற்றியுள்ளார்கள். இந்த பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற வாழ்த்துக்கள்..!”

நடிகர் அஷ்வின் –

ரக்‌ஷன் இப்பாடல் செய்தது எனக்கு சந்தோஷம் ரக்‌ஷனிடம் நிறைய முறை ஆல்பம் பாடல் செய்ய சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த பாடல் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி..!”

நடிகர் ரியோ ராஜ் –

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இதில் வேலை செய்த அனைவரையுமே எனக்கு நன்கு தெரியும். GP முத்து அண்ணன் இப்பாடலில் நடித்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்..!”