November 28, 2026
  • November 28, 2026
Breaking News
July 10, 2019

ஜோடி மாறிய தனுசு ராசி நேயர்களே ஹரிஷ் கல்யாண்

By 0 1622 Views

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ‘ரெபா மோனிகா ஜான்’ மற்றும் ‘ரியா சக்ரவர்த்தி’ ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு மாற்றம். ‘ரியா சக்ரவர்த்தி’க்கு பதிலாக பாலிவுட் ஸ்டார் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Digangana Suryavanshi in Dhanusu Raasi Neyargalae

Digangana Suryavanshi 

‘ரியா’வின் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த மாற்றமாம்.

திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சஞ்சய் பாரதி, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ‘ஹிப்பி’ படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உடனே நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்..!” என்றார்.

இந்த வாரம் முதல் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பில் ‘திகங்கனா சூர்யவன்ஷி’ கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதையாம்.