April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Monthly Archives: March 2022

இந்தியாவில் 3.20 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் பிரதமர் உறுதி

by on March 19, 2022 0

டெல்லி – இன்று 14 வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் வரவேற்றார். 14-வது உச்ச மாநாட்டில் பிரதமர் இருவரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் […]

Read More

குதிரைவால் திரைப்பட விமர்சனம்

by on March 19, 2022 0

கிடைத்தற்கரிய ஒரு பொருளை குதிரைக் கொம்பு என்பார்கள். இந்தப் பட இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் அப்படி ஒரு அரிய விஷயத்தை குதிரைவாலாக மாற்றியிருக்கிறார்கள். சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் கனவுகளுக்கும் நாம் நிஜத்தில் காணும் கனவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமாவில் வரும் கனவுகள் மிகுந்த லாஜிக்கோடு நிஜத்தின் நகல் போலவே காட்டி பின்னால் அதைக் கனவு என்று சொல்லி முடிப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளில் எந்த லாஜிக்கும் இருக்காது. நம் நினைவுப் படிமங்களில் தங்கிவிட்ட […]

Read More

கள்ளன் தலைப்புக்காக ஆபாசத் தாக்குதல் நடத்துகிறார்கள் – கலங்கிய இயக்குனர் சந்திரா

by on March 18, 2022 0

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன. ‘கள்ளன்’ என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இது […]

Read More

செல்ஃபி படம் மூன்று மடங்கு லாபம் தரும் – தயாரிப்பாளர் தாணு

by on March 18, 2022 0

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]

Read More

சிங்கப்பூருக்கு பயணிகளை வரவேற்க சென்னையில் எதிர்காலக் கனவுகள் ஓவியக் கண்காட்சி

by on March 17, 2022 0

சிங்கப்பூரில் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட அனுபவங்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில் சிங்கப்பூர் தனது ப்ரத்யேக பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் அனைத்து இந்திய நகரங்களுக்கும் இடையே தனிமைப்படுத்துதல் இல்லாத, இருவழி தடுப்பூசி பயண வழித்தடத்தை (Vaccinated Travel Lane (VTL)) 16 மார்ச் 2022 முதல் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. […]

Read More

தோனியின் ஆற்றல் வேகத்தில் இரு புதிய சிமெண்ட் வகைகளை இந்தியா சிமெண்ட் அறிமுகம் செய்கிறது

by on March 17, 2022 0

சென்னை, மார்ச் 16, 2022: வலுவான தேசத்தை கட்டமைக்க வேண்டுமென்ற அதன் குறிக்கோளைச் சார்ந்து, கான்க்ரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே) மற்றும் ஹாலோ சூப்பர் கிங் (ஹெச்எஸ்கே) என்பவற்றின் அறிமுகத்தினால் சிமெண்ட் தொழில்துறையில் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் (சந்தையாக்கல்) திரு. மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஆற்றல் வேகம் மற்றும் களத்தில் செயல்படும் முறை போன்ற அற்புதமான பண்புகள் […]

Read More

தமிழ் சினிமாவில் அறிவு பூர்வமான திரைப்படம் குதிரைவால் – மிஷ்கின்

by on March 17, 2022 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை வெளியிட […]

Read More

குதிரைவால் திரைப்படத்தின் சிறப்பு என்ன?

by on March 16, 2022 0

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.  அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.  இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் […]

Read More

ஹிஜாப் தடை தொடர கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

by on March 15, 2022 0

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் […]

Read More

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீஸின் உலகளாவிய வளாகம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்

by on March 15, 2022 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-03-2022 அன்று டி.எல்.எப். டெளன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசி”ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் ரூ.50 கோடி முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல் திட்டத்தில், இந்த ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். பூங்காவானது 6.8 மில்லியன் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் […]

Read More