April 29, 2024
  • April 29, 2024
Breaking News

Monthly Archives: March 2022

கூகுள் குட்டப்பா பட டிரைலரை பெற்றுக்கொண்ட நிஜ ரோபோ – நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

by on March 15, 2022 0

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெயிண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், […]

Read More

மாறன் திரைப்பட விமர்சனம்

by on March 14, 2022 0

முதல் படத்தில் அதிசயிக்க வைத்த இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களிலும் அப்படி அதிசயிக்க வைக்க வேண்டியதில்லை என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் லைனும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான். ஆனால் அதற்கு அவர் களமாகக் கையாண்டிருப்பது சமுதாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைத் துறையை. சத்தியமூர்த்தி என்ற சத்தியம் தவறாத பத்திரிகையாளருக்கு மகனாக இருக்கும் தனுஷும், ஒரு பத்திரிகையாளராக, அதேபோன்று உண்மையை உரக்க சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். உண்மையை உக்கிரமாக எழுதிய […]

Read More

பீஸ்ட் வெற்றி பெறுவது விஷயமில்லை கள்ளன் வெற்றி பெறுவதே நாகரிகம் – சீனு ராமசாமி

by on March 13, 2022 0

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இந்தப் படைத்தை எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கிறார். நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையை இந்த கதை காட்டுகிறது. படத்தில் மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கள்ளன் படம் படம் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Read More

கிளாப் திரைப்பட விமர்சனம்

by on March 12, 2022 0

விளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது. அந்த லைனை இந்தப்படத்திலும் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதற்கு அவர் இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருப்பது ‘தட களம்’.   தடகளத்தில் ஓட்டப்பந்தய வீரராக தேசிய […]

Read More

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம்

by on March 10, 2022 0

சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல […]

Read More

அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர் – சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சாதனை

by on March 9, 2022 0

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   92 வயது கொண்ட முதியவர் ஒருவர் அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அடிக்கடி மயக்கம் அடையும் பிரச்சினையால் வந்தார். அவரது இதயம் முழுமையாக அடைபட்டு நிமிடத்திற்கு 33 […]

Read More

திருமாவளவன் எம்பி பங்கேற்ற மகளிர் தின சிறப்பு சீன கண்ணாடி கோப்பை சிகிச்சை

by on March 8, 2022 0

2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அல் ஷிபா, பிரத்தியேகமான சீன கண்ணாடிக் கோப்பை ( Cupping) சிகிச்சையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த சிகிச்சையகத்தை நடத்தி வருகிறது. சிறந்த அனுபவமிக்க பணியாளர்களின் துணைகொண்டு உலக தரத்திலான கப்பிங் சிகிச்சை மற்றும் அது தொடர்பான பல்வகை சேவைகளை வழங்குகிறது. மேலும் சிகை முகப் பராமரிப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான சேவையில் 20 வருடங்கள் அனுபவம் பெற்ற முன்னணி நிறுவனமான அல் ஷிபாவுக்கு உலகம் முழுவதிலும் […]

Read More

மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா

by on March 8, 2022 0

இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து […]

Read More

சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது

by on March 7, 2022 0

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது.   உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.   பிரிவினைவாத கிழக்குப் […]

Read More

குதிரைவால் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by on March 7, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் […]

Read More