May 2, 2024
  • May 2, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • மாறன் திரைப்பட விமர்சனம்

மாறன் திரைப்பட விமர்சனம்

By on March 14, 2022 0 284 Views

முதல் படத்தில் அதிசயிக்க வைத்த இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களிலும் அப்படி அதிசயிக்க வைக்க வேண்டியதில்லை என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இந்தப் படத்தின் லைனும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான். ஆனால் அதற்கு அவர் களமாகக் கையாண்டிருப்பது சமுதாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைத் துறையை.

சத்தியமூர்த்தி என்ற சத்தியம் தவறாத பத்திரிகையாளருக்கு மகனாக இருக்கும் தனுஷும், ஒரு பத்திரிகையாளராக, அதேபோன்று உண்மையை உரக்க சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். உண்மையை உக்கிரமாக எழுதிய ஒரே காரணத்துக்காக தனுஷின் அப்பாவாக வரும் ராம்கி கொல்லப்பட்டிருக்க அதேபோன்று தனுஷும அக்னிக் குஞ்சாக வருவதால் என்னென்ன விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது கதை.

பத்திரிகையாளர் என்றாலே சினிமாவில் ஜிப்பாவும், ஜோல்னாப் பையும்தான் என்பதை மாற்றி தனுஷை ஒரு இளம் பத்திரிகையாளராக புதிய கெட்டப்பில் காட்டி இருப்பதற்காக கார்த்திக் நரேனைப் பாராட்டலாம்.