April 29, 2024
  • April 29, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • தோனியின் ஆற்றல் வேகத்தில் இரு புதிய சிமெண்ட் வகைகளை இந்தியா சிமெண்ட் அறிமுகம் செய்கிறது
March 17, 2022

தோனியின் ஆற்றல் வேகத்தில் இரு புதிய சிமெண்ட் வகைகளை இந்தியா சிமெண்ட் அறிமுகம் செய்கிறது

By 0 308 Views

சென்னை, மார்ச் 16, 2022: வலுவான தேசத்தை கட்டமைக்க வேண்டுமென்ற அதன் குறிக்கோளைச் சார்ந்து, கான்க்ரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே) மற்றும் ஹாலோ சூப்பர் கிங் (ஹெச்எஸ்கே) என்பவற்றின் அறிமுகத்தினால் சிமெண்ட் தொழில்துறையில் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவிக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் (சந்தையாக்கல்) திரு. மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஆற்றல் வேகம் மற்றும் களத்தில் செயல்படும் முறை போன்ற அற்புதமான பண்புகள் போன்ற அம்சங்களை பிரதிபலிப்பதாக சிஎஸ்கே சிமெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலோ சூப்பர் கிங் (HSK) சிமெண்ட், ப்ரீ – காஸ்ட் ஹாலோ பிளாக்குகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏஏசியிலிருந்து ஹாலோ பிளாக்குகள் வரை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் விரைவான செட்டிங், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புத்திறன் மற்றும் நீடித்த நிலைப்புத்தன்மையை ஹெச்எஸ்கே ஏதுவாக்குகிறது. 

இந்தியா சிமெண்ட்ஸ் – ன் கான்கிரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே), ‘7 – ன் சக்தியை’ (power of 7) செறிவாகக் கொண்ட ஒரு புதுமையான தயாரிப்பாகும். கட்டிடத்தின் அடித்தளத்திலிருந்து மேற்கூரை வரை அனைத்து கான்கிரீட் தேவைகளுக்கும் ஒற்றை நிறுத்த தீர்வாக இது இருக்கும். அதிக நிலைப்புத்தன்மையுள்ள சக்தி, விரைவான செட்டிங் நேரம், எளிதாக கையாளும் திறன் அரிப்புக்கு எதிர்ப்புத்திறன், எப்போதும் நிலைக்கின்ற மிருதுவான ஃபினிஷ், கசிவின்மை மற்றும் அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற செயல்திறன் என 7 சிறப்பம்சங்களின் சக்தி இதில் அடங்கியுள்ளன. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் – ன் தயாரிப்புகளுள் ‘இந்த வகையினத்தில் மிகச்சிறந்த’ தனித்துவமான தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமையன்று இந்த இரு புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்தபிறகு, இந்தியா சிமெண்ட்ஸ் – ன் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. என். ஸ்ரீனிவாசன் கூறியதாவது: “சிமெண்ட் என்பது, ஒரு நாள் மட்டுமல்லாமல், வாழ்நாள் காலம் முழுவதும் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றலுள்ள தயாரிப்பாக இருக்கவேண்டும். பல நபர்கள், அவர்களது கனவு இல்லங்களை நம்பிக்கைகளோடும் மற்றும் வாழ்நாள் முழுவதும் கடும் உழைப்பில் சேகரித்த நிதியைக் கொண்டும் கட்டுகின்றனர். கட்டமைப்பில் கீறல்கள், வெடிப்புகள், நீர்க்கசிவு, நீர்உட்புகும் தன்மை ஆகிய கட்டுமான பணிப் பிரச்சனைகளை எதிர்கொள்கிற, இந்நாடு முழுவதிலும் உள்ள வீடு உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானப்பணி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக கான்கிரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே) உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்டகால நிலைப்புப் தன்மையையும் மற்றும் வலுவையும் இது உறுதி செய்யும். எமது அனைத்து தயாரிப்புகளுமே ப்ரீமியம் தரத்திலானவை. அவைகளது நம்பகத்தன்மை, நிலைப்புத்தன்மை, ஒரே மாதிரியான தரம் ஆகியவற்றின் காரணமாக பல தலைமுறைகளைத் தாண்டி அவற்றின் உயர்தரத்தை இவைகள் நிரூபித்திருக்கின்றன. அவைகளது உறுதியான மற்றும் திடகாத்திரமான தன்மைக்காகவே எமது பிராண்டுகளை நுகர்வோர்கள் விரும்பி வாங்கி அங்கீகரிக்கின்றனர்.”

இந்தியா சிமெண்ட்ஸ்-ன் கடந்த 70 ஆண்டுகள் செழுமையான பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய திரு. என். ஸ்ரீனிவாசன், “இத்தொழில்துறையில் இயங்கும் பிற போட்டியாளர்களும் அவர்களது சிமெண்ட் 70 ஆண்டுகள் நிலைக்கக்கூடியது என்று உறுதி கூறலாம். ஆனால், எமது தயாரிப்புகள் அவைகளின் தரத்தை அதையும் தாண்டி நிரூபித்திருக்கின்றன மற்றும் இன்னும் தலைநிமிர்ந்து உயரமாகவும், வலுவாகவும் நிலைத்து நிற்கின்றன என்று என்னால் பெருமிதத்தோடு கூற இயலும். எங்களது சிமெண்ட்டைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கட்டிடமுமே எமது சிமெண்ட்டின் தரம் மற்றும் உறுதிக்கு நிலையான சாட்சியமாக திகழ்கின்றன.” என்று கூறினார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தையாக்கல் துறையின் துணைத் தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் திரு. எம்எஸ். தோனி பேசுகையில், “நீண்ட ஆண்டுகள் கொண்ட ஒரு வாழ்நாள் காலத்தில் சிறந்த செயல் வீரராக திகழ்வதற்கான மற்றும் சிறந்த இன்னிங்ஸ்-ஐ விளையாடுகிற திறன்கொண்ட சக்தி மற்றும் பொறுப்புறுதியை கான்கிரீட் சூப்பர் கிங் கொண்டிருக்கிறது. அடித்தளங்களிலிருந்து மேற்கூரை வரை கான்கிரீட் சூப்பர் கிங் என்றாலே வலுவான கட்டிடங்கள் மற்றும் இல்லங்கள் என்பதையே குறிக்கும். காலம் காலமாக நிலைத்து நிற்கக்கூடியவாறு ஏழு சிறப்பம்சங்களின் சக்தியை செறிவாக கொண்டதாக இந்த சிமெண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது,” என்று கூறினார்.

இந்நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் திருமதி. ரூபா குருநாத், இத்தயாரிப்புகளது அறிமுகம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “தேச கட்டமைப்பிற்கும், நவீன இந்தியாவை உருவாக்குவதற்குமான 75 ஆண்டுகால தனது உத்வேகமளிக்கும் பயணத்தை இந்தியா சிமெண்ட்ஸ் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழா ஆண்டின்போது எமது புதிய ப்ரீமியம் சிமெண்ட்-ஐ சந்தையில் அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் பெருமை கொண்டிருக்கிறோம். இந்த புதிய தயாரிப்புகளை தயாரித்து வழங்குவதற்காக கடுமையாக செயலாற்றியிருக்கின்ற எமது உற்பத்தி மற்றும் சந்தையாக்கல் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன். எமது டீலர்கள், ஸ்டாக்கிஸ்ட்டுகள், தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு இப்புதிய தயாரிப்புகள், வீடுகளை கட்டும் தனிநபர்கள் மற்றும் கட்டுமானப் பணி நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.” என்று கூறினார். 

இந்தியா சிமெண்ட்ஸ்-ன் செயலாக்க தலைவர் திரு. ராகேஷ் சிங், இந்நிகழ்வில் பேசியபோது, “பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், டீலர்கள், பொருள்/சேவை வழங்குனர்கள் அல்லது போக்குவரத்து நிறுவனங்கள் என யாராக இருப்பினும் மகிழ்ச்சியும், பற்றுறுதியும் மிக்க பங்காளர்களே எமது சக்தியாக திகழ்கின்றனர். உண்மையில், மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த டீலர்களையும் மற்றும் பணியாளர்களையும் கொண்டிருக்கிற ஒரே நிறுவனமாக நாங்கள் இருக்கக்கூடும். இத்தனை ஆண்டுகளாக தொழிலகங்களிலும் மற்றும் சந்தைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான தரத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது திறனே, மூன்று வெற்றிகரமான பிராண்டுகளை (சங்கர், கோரமண்டல் மற்றும் ராசி) நாங்கள் கொண்டிருப்பதற்கான காரணமாக இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களுமே (அதிக சிமெண்ட்-ஐ பயன்படுத்துகிற மையங்கள்) எங்களது ஏதாவதொரு தொழிலகத்திலிருந்து 200 கிமீ தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன. இதன் மூலம், புதிய சிமெண்ட் சப்ளைகளை விரைவாக வழங்குவதை எங்களால் உறுதிசெய்ய முடிகிறது,” என்று கூறினார்.

இந்நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி திரு. பார்த்தசாரதி ராமானுஜம் இந்நிகழ்ச்சியின்போது கூறியதாவது, “எமது வளர்ச்சி பயணத்தில் சிஎஸ்கே சிமெண்ட்-ன் அறிமுகம் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். இந்தியா சிமெண்ட்ஸ் வழங்கும் மிகச்சிறந்த தயாரிப்பாக இதை ஆக்குவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். இந்த இரு தயாரிப்புகளின் தனிச்சிறப்பான தன்மையை வலியுறுத்துவதற்கான எமது செயல் உத்தி மற்றும் விளம்பரம், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பல அடுக்குகள் கொண்ட உயர்ந்த கட்டிடங்களை கட்டுகிறபோது சந்தையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த சிமெண்ட்-ஆன சிஎஸ்கேயை நுகர்வோர்கள், டீலர்கள் மற்றும் கட்டுமானப் பொறியாளர்கள் விரும்பித் தேர்வு செய்யுமாறு ஊக்குவிக்கும்.”

நுகர்வோர்கள் மீது தான் கொண்டிருக்கும் பொறுப்புறுதி மற்றும் 75 ஆண்டுகால பாரம்பரியத்தை இனியும் வலுவாக தொடரும் வகையில், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்திலிருந்து அறிமுகம் செய்யப்படும் இந்த இரு புதிய சூப்பர் கிங்ஸ்கள் (கான்கிரீட் சூப்பர் கிங் மற்றும் ஹாலோ சூப்பர் கிங்), இந்தியாவெங்கும் அனைத்து டீலர் கடைகளிலும் கிடைக்கும்.

இந்தியா சிமெண்ட்ஸ் குறித்து…

தென்னிந்தியாவில் அடித்தளத்தைக் கொண்டு இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களுள் ஒன்றாகத் திகழும் இந்தியா சிமெண்ட்ஸ் 1946ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோர்களான திரு. எஸ்என்என் சங்கரலிங்க ஐயர் மற்றும் திரு. டி.எஸ். நாராயணசுவாமி ஆகியோரால் நவீன மற்றும் உறுதியான இந்தியாவை கட்டமைப்பது என்ற செயல்திட்ட நோக்கத்தோடு இந்நிறுவனம் நிறுவப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக தேச கட்டமைப்பில் உத்வேகமளிக்கிற, உயர் நேர்த்தியான இதன் பயணத்தில், நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டிடக்கலை நிபுணர்கள், கட்டுமான பணி நிறுவனங்கள், பொறியியலாளர்கள், ஸ்டாகிஸ்ட்கள், டீலர்கள் மற்றும் நுகர்வோர்களின் வலுவான நம்பிக்கையை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது. நுகர்வோர்களின் தேவைகளை புரிந்துகொள்ள தொடர்ந்து தீவிர முனைப்புடன் செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ், 100% வாடிக்கையாளர் திருப்திக்கு உத்தரவாதம் தருகிறவாறு சிறப்பான தீர்வுகளை கண்டறிந்து அவற்றை வழங்குகிறது. இந்த பிராண்டின் தயாரிப்புகளில் உயர் நேர்த்தியை உருவாக்குவதற்கு கடுமையான தர நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், தெலங்கானா, மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 8 சிமெண்ட் ஆலைகளையும் மற்றும் 2 அரவை தொழிலகங்களையும் கொண்டிருக்கும் இதன் மொத்த உற்பத்தித்திறன் ஏறக்குறைய 16 மில்லியன் டன்களாகும். நுகர்வோரின் வலுவான நம்பிக்கையைப் பெற்ற சங்கர் மற்றும் கோரமண்டல் பிராண்டுகள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பல பிரபல கட்டிடங்கள், உட்கட்டமைப்பு செயல்திட்டங்கள் மற்றும் கனவு இல்லங்களை கட்டி உருவாக்குவதில் தொடர்புடையதாக இருக்கின்றன.