விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறதென்ற எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக அமைந்த படம். அவருக்கென்றே எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.
அரக்கன் கோலியாத்தை எதிர்கொண்டு வென்ற சிறுவன் டேவிட்டின் லைனை ஒற்றிய கதை. இங்கே அங்க மறுக்கிற தாதாவாக இருக்கும் விஜய் சேதுபதியை எளிய சிறுவன் பிருத்வி ராஜ் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.
ஏரியாவை கலங்கடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கட்டத்தில் பார்த்து பயம் கொள்ளும் சிறுவன் பிருத்வி ராஜ் எதிர்பாராமல் அவர் பள்ளியின் கழிவறைக்குள் போயிருந்த சமயம் வெளியே தாழ்ப்பாள் போட்டுப் பூட்டி விடுகிறான்.
பள்ளி விடுமுறையானதால் ஒருவாரம் பள்ளியைத் திறக்காத நிலையில் உள்ளேயே சிக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதிக்கு தினமும் பொறையை உள்ளே அனுப்பி அவர் வெறுப்பை சேகரித்து கொள்கிறான்.
தன்னைப் பூட்டியது யார் என்று தெரியாமல் ஒருவாரம் வெறி ஏறிக்கிடக்கும் விஜய் சேதுபதியை ஒருநாள் பாம்பு கடித்துவிட, பயந்துபோன பிரித்விராஜ் அவர் அங்கு இருப்பதை வெளியில் சொல்ல, சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப் படுகிறார்.
அவரை அடைத்துவைத்த சிறுவனே இப்போது அவரைக் காப்பாற்றிய கடவுளாகி வர மனதில் இடம் பிடிக்கிறான். ஆனால், விஜய் சேதுபதியும், அவர் ஆண்களும் கொலை வெறியுடன் அவரைப் பூட்டி வைத்தவர்களைத் தேடிக் கொண்டிருக்க அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
கேரக்டரை அப்படியே மனதில் ஏற்றி வெளிக்காட்டி விடும் விஜய் சேதுபதி இதிலும் தன் அர்ப்பணிப்பை இதில் வெளிக்காட்டி இருக்கிறார். சென்னைத் தமிழில் பேசிக்கொண்டு, தெனாவட்டாகத் திரிந்தாலும் மனைவி மீது அன்பையும், காதலையும் காட்டுவதில் ரசிக்க வைக்கிறார்.
*நடிகர்கள்*
விஜய் சேதுபதி @ பத்தா
லிஜோமோல் ஜோஸ் @ கண்ணிமா
சாய் பிரித்வி ராஜ் @ சபரி
சஹஸ்ரா @ தேன்மொழி
அர்ஜுன் சிதம்பரம் @ ஜோதி
ஹரி கிருஷ்ணன் @ திருநாவுக்கரசு
சாண்டி பாலச்சந்தர் @ செல்வி
விஷ்ணு கோவிந்த் @ தில்லி
பாலமுருகன் @ துரை
*தொழில்நுட்பக் குழு:*
இயக்கம்: பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு: முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் ஸ்டுடியோ18 ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்
இசை: சாய் அப்யங்கர்
இணை தயாரிப்பாளர்: அஷ்வின் முருகன்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : டி. முத்துராஜ்
ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி
கலை இயக்குநர்: கண்ணன்.எஸ்
சண்டைப் பயிற்சி: ஸ்டன் சிவா, யு. பிருத்வி, கெவின் குமார்
நடன அமைப்பு: ராஜு சுந்தரம்
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, கே.கே. நகர் கானா ஜீவா, தமிழ்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
ஒப்பனை: வினோத் சுகுமாரன்
ஆடை வடிவமைப்பாளர்: முகமது சுபீர்
வடிவமைப்பு: கோபி பிரசன்னா
ஸ்டில்ஸ்: மனேக்ஷா.டி
நிர்வாகத் தயாரிப்பாளர்: மோகன் கணேசன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஷாலினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடியோ லேபிள்: திங்க் மியூசிக்