1950 களின் இறுதியில் வைகை அணை கட்டப்பட்ட போது பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி போய் விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்படியே பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வேறு இடத்தில் குடியை மறுத்தப்பட அங்கும் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயம் இல்லாமல் போகிறது.
அதனால் பிழைப்புக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு எல்லாம் காட்பாதராக நிற்கிறார் சரத் குமார். அவரும் அப்படிப்பட்ட சட்டவிரவாத செயல்களை செய்து வருகிறார்.
அப்படி பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சண்முக பாண்டியனையும் தன்னைப் பலவே வளர்க்கிறார். சண்முக பாண்டியனும் பணம் இல்லாததால் பெற்றோரை இழந்த நிலையில் அதே பணத்தை சம்பாதித்து பெரும் பணக்காரராக ஆசைப்பட்டு சரத்குமார் உடன் வலம் வருகிறார்.
என்னதான் ஊருக்கு நல்லது செய்கிறவர்களாக இருந்தாலும் இருவரும் செய்யும் தொழில் தவறானதாக இருக்க அதன் முடிவு என்ன ஆனது என்று சொல்வதுதான் இந்த படத்தின் கதை.
சண்முகபண்டியன் தான் ஹீரோ என்கிற நிலையில் தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார் அவர். யாருக்கும் வாய்க்காத உயரமும் உடலும் அமையப்பற்ற அவர் நடிப்பிலும் தன்னை வளர்த்துக் கொண்டால் அப்பாவின் இடத்தை பிடிப்பது உறுதி.
அதனால் நடிப்பளவில் ஹீரோவாக தெரிபவர் சரத்குமார்தான். இதுவரை அவர் ஏற்காத அளவில் வெள்ளை முடி தாடையுடன் ஒரு ஹாலிவுட் நடிகரை போல் தோற்றமளிக்கிறார். ஃப்ளாஷ் பேக்கில் இளைஞராக இன்னொரு வேடமும் அவருக்கு உண்டு.
அவரது வித்தியாசமான தோற்றமும் நடிப்போம் படத்துக்கு பெரும் பலமாக இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் தார்னிகாவை என்னதான் சண்முக பாண்டியன் காதலித்தாலும் தார்மீக அடிப்படையில் அந்த காதல் வெற்றி பெற சாத்தியம் இல்லாமலேய இருக்கிறதுகா.
அறிமுக நாயகியாக இருந்தாலும் காக்கி உடையும் உடல் மொழியிலும் ஒரு காவல் அதிகாரியாகவே தோற்றமளிக்கிறார் தார்னிகா.
காக்கி உடையில் மட்டுமல்லாமல் புடவையிலும் விழுறம் அவர் இந்த இரண்டு உடைகளில் எதில் எடுப்பாக தெரிகிறார் என்பதை ஒரு போட்டியை வைக்கலாம்.
அவரது உடல்வாகுக்கு தாராளமயமாக்களில் இறங்கினால், தாராளமாக உயர்ந்து விடுவார் தாரணிகா.
காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், கல்கி ராஜா ஆகியோர் பார்வையாளர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு வந்தாலும் பல இடங்களில், அவர்களது காமெடி கடியாய் கடித்து கொள்ளுகிறது.
காவல்துறை அதிகாரியாக சிறிய வில்லத்தனம் காட்டி நடித்திருக்கும் சுஜித் சங்கர், சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை என்பது டைடில கார்டில் மட்டுமே தெரிகிறதே தவிர, பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெரியவில்லை. குறிப்பாக இளையராஜா பாடிய பாடலும் நினைவில் நிற்காமல் சட்டென்று ஒலித்து மறைந்து விடுகிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் படம் குழுவதும் பளிச்சென்று கலர்புல்லாக இருக்கிறது. குறிப்பாக வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காட்டப்படும் பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் அழகோ அழகு.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், வழக்கமான கமர்ஷியல் ஃபார்மட் திரைக்கதையாக இருந்தாலும், தன்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், வழக்கமான பாணியில் தொடர்ந்து படங்களை கொடுத்தாலும், காமெடி என்ற தனது தனித்துவமான பலம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து விடுவார். ஆனால், இந்த படத்தில் அவரது பலம் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
சண்முக பாண்டியனுக்காக திரைக்கதையில் ஆக்ஷனை தூக்கலாக எழுதியிருக்கும் இயக்குநர் பொன்ராம், ஒரு கட்டத்தில் சண்முக பாண்டியனை காட்டிலும் சரத்குமார மீது அதீத நம்பிக்கை வைத்து காட்சிகளை வடிவமைத்திருப்பது தெரிகிறது. அது தான் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது.
கொம்பு சீவி –