இயக்குநர் விஜய முருகன் டைரக்ஷனில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள்.
தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கலை. விமர்சனங்களும் நெகட்டிவாக வந்துக்கிட்டிருக்க, யோகி பாபுவின் பெயரை வைத்து ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று ஒரு பக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ரசிகர்களை ஏமாற்றியதற்கு யோகிபாபு வருத்தம் தெரிவித்திருக் கிறாராம்.
காக்டெய்ல் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக 10 நாட்கள்தான் படப்பிடிப்பில் கலந்து கொண் டேன். ஆனால் நான்தான் படத்தின் ஹீரோ என்பது போல பிரமோஷன் வேலை செய்து இது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதைப் போல் வெளியில் காட்டிவிட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார்.
இதனால் தன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால் வருத்தப்பட்டிருக்கிறார். பல படங்களில் நட்புக்காக அவர்கள் கேட்பதால் நடித்துக் கொடுக்கிறேன். பல படங்களில் காமெடியனாக நடிக்கிறேன்.வெகு சில படங்களிளே கதையின் நாயகனாக தேர்வு செய்து நடிக்கிறேன்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் தன் பெயரை வைத்து பப்ளிசிட்டி செய்து ஹீரோ இமேஜைக் காட்டி ரசிகர்களை ஏமாற்றிவதி வேதனையாக இருப்பதாக யோகிபாபு தெரிவித்திருக்கிறார்.
ஹீரோ ஆசை அதிகம் இல்லை என்றும் தன்னை காமெடியனாகவே மக்கள் மனதில் நிலைநிறுத்த ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிராராம் யோகிபாபு.