September 1, 2025
  • September 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யோகி பாபு திடீர் திருமணம் மஞ்சுபார்கவி யை மணந்தார்
February 5, 2020

யோகி பாபு திடீர் திருமணம் மஞ்சுபார்கவி யை மணந்தார்

By 0 922 Views

நகைச்சுவை நடிகர் யோகிபாபு சொந்தமாக வீடு கட்டிவிட்டார். திருமணம் ஒன்றுதான் பாக்கி என்கிற நிலையில் சமீப காலமாகவே அவரது திருமணம் பற்றிய செய்திகளும், இவர்தான் மணப்பெண் என்ற செய்திகளும் உலா வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இன்று காலை யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது .

திருமணம் பற்றிய மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் திடீர் திருமணம் நிகழ்ந்து விட்ட காரணத்தினால் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார் யோகிபாபு இந்த வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும்.