April 23, 2024
  • April 23, 2024
Breaking News
February 5, 2020

தஞ்சாவூர் காரன் வரவேற்பதில் தவறில்லையே..?

By 0 515 Views

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.

உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெறுகிறது.

தஞ்சை குதூகலத்தில் மிதந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல வரவேற்புகள் கவனத்தைக் கவர்ந்தது. அதில் களவாணி வில்லன் துரை சுதாகரின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிதத போஸ்டர்களும் வியப்பை அளிக்க, குடமுழுக்கு நிமித்தம் தஞ்சை பெரிய கோவிலுக்குள் ரவுண்டடித்துக் கொண்டு இருந்த துரை சுதாகரிடமே கேட்டோம்.

“தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல், கலை, சினிமா, தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள்
வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.

இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்பதில் மகிழ்ச்சி. என் ரசிகர்கலும் தஞ்சையை சேர்ந்தவர்கள்தான். நாங்கள் அழைப்பதில் தவறில்லையே ..!” என்றார்.

தவறே இல்லிங்க..! தாராளமா அழையுங்க..!